இந்த திறனாய்வு, ஆஸ்துமா கொண்ட குழந்தைகளுக்கும் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் எழுத்துப்பூர்வ நடவடிக்கை திட்டங்களை அளிப்பதின் மொத்த தாக்கத்தை ஆராய்கிறது.

ஆஸ்துமா கொண்ட குழந்தைகளுக்கு ஒரு எழுத்துப்பூர்வ நடவடிக்கை திட்டத்தை அளிப்பது அல்லது அளிக்காமல் இருப்பதின் பலனை ஆராய்ந்த எந்த சோதனையையும் நாங்கள் காணவில்லை.இணை-சிகிச்சை தலையீடுகள் ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில்,அறிகுறி சார்ந்த மற்றும் அதற்கு எதிராக உச்ச பாய்வு எழுத்துப்பூர்வ நடவடிக்கை திட்டங்களின் விளைவை ஒப்பிட்ட, 355 குழந்தைகளைக் கொண்டிருந்த நான்கு மருத்துவ சோதனைகள் கண்டறியப்பட்டது. உச்ச பாய்வு எழுத்துப்பூர்வ நடவடிக்கை திட்டத்தை பெற்ற குழந்தைகளை ஒப்பிடும் போது, அறிகுறி-சார்ந்த நடவடிக்கை திட்டத்திற்கு ஒதுக்கிடப்பட்ட குழந்தைகளுக்கு தீவிர பராமரிப்பு அமர்வு கம்மியாக வேண்டியிருந்தது. அதிக குழந்தைகள், உச்ச பாய்வு எழுத்துப்பூர்வ நடவடிக்கை திட்டத்துடன் ஒப்பிடும் போது, அறிகுறி-சார்ந்த நடவடிக்கை திட்டத்தை தொடர்ந்து பயன்படுத்த விரும்பியது வேண்டிய விதிவிலக்கை தவிர, பெரும்பாலான பிற விளைவுகள் ஒரே மாதிரி இருந்தன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information