நீரிழிவு நோய் முன்னம் கொண்ட வயது வந்தவர்களில், நீண்ட-கால, மருந்தற்ற உடல் எடை குறைக்கும் சிகிச்சை தலையீடுகள்

அசாதாரண இரத்த சர்க்கரை அளவுகள் கொண்ட, ஆனால் நீரிழிவு நோய் கொண்ட நபர்களின் வரம்பில் அல்லாத மக்கள்' நீரிழிவு நோய் முன்னம்' கொண்டிருகின்றனர் என்று கூறப்படுவர், இது பெரும்பாலும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு முன்னதாக உருவாகும். நீரிழிவு நோய் முன்னம் கொண்ட பெரும்பான்மையான நபர்கள் அதிக உடல் எடை கொண்டவராக இருப்பர், மற்றும் உடற் பருமன் இரத்த சர்க்கரை அளவுகளை மற்றும் நீரிழிவு நோய் முன்னத்துடன் தொடர்புடைய பிற பிரச்னைகளை மோசமாக்கும். நீரிழிவு நோய் முன்னம் கொண்ட நபர்களில், உணவுமுறை திட்டம், உடலியல் நடவடிக்கை, அல்லது நடத்தை சிகிச்சை தலையீடுகள் அவர்களின் உடல் எடையில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை ஏற்படுத்தின மற்றும் நீரிழிவு நோய் நிகழ்வை குறிப்பிடத்தக்க அளவு குறைத்தன என்றும் இந்த திறனாய்வில் நாங்கள் கண்டோம். இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவுகள் ஆகியவற்றை ஆராய்ந்த சில ஆய்வுகளில், மிதமான, ஆனால் குறிப்பிடத்தக்க புள்ளியல் மேம்பாடுகள் இன்றி மேம்பட்டன என்று காணப்பட்டது. வாழ்க்கைத் தரம் அல்லது இறப்பு மீதான எந்த தரவும் காணப்படவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information