அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் அல்லது மோட்டார் நியூரான் நோய் கொண்ட மக்களுக்கான உடற்பயிற்சி சிகிச்சை

மோட்டார் நியூரான் டிசிஸ் (எம்.என்.டி) என்று கூட அழைக்கப்படும் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (ஏ.எல்.எஸ்) கொண்ட மக்களில், தசை பலவீனம் மிகவும் பொதுவானதாகும். ஒரு பலவீனமான தசையானது ஏற்கனவே அதிகபட்ச வரம்பின் அருகில் செயல்படுகிற காரணத்தினால், அதற்கும் மேலாக வேலை செய்தால் சேதமடையக்கூடும். இதன் காரணமாக, சில நிபுணர்கள் ஏ.எல்.எஸ் உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி திட்டங்களை ஊக்குவிப்பதில்லை. எனினும், ஏ.எல்.எஸ் கொண்ட ஒரு நபர் செயல்படாத போது அந்நோயினால் ஏற்படும் ஆக்கநிலையகற்றல் (தசை செயல்திறன் இழப்பு) மற்றும் பலவீனத்திற்கு மேலாக பயன்பாட்டின் பற்றாக்குறையாலும் ஆக்கநிலையகற்றல் மற்றும் பலவீனம் ஏற்படுகிறது. குறைந்த அளவு செயல்பாடு தொடர்ந்தால், பல உறுப்பு அமைப்புகள் பாதிக்கப்படக் கூடும், மற்றும் ஏ.எல்.எஸ் கொண்ட ஒரு நபரில் மேலும் நிலையகற்றல் மற்றும் தசை பலவீனம் முன்னேறக் கூடும், மற்றும் தசை பலவீனம் மற்றும் மூட்டு இறுக்கம் ஆகியவை தசை ஒடுங்கல் (அசாதாரண உருச்சிதைவு மற்றும் தசைகள் ஒடுங்கல்) மற்றும் வலிக்கும் வழிவகுக்கும். இவை அனைத்தும் அன்றாட நடவடிக்கைகளை செய்வதில் கடினத்தை ஏற்படுத்தும். இந்த திறனாய்வு, ஏ.எல்.எஸ் மக்களில் உடற்பயிற்சியைப் பற்றிய இரண்டு சமவாய்ப்பு ஆய்வுகளை மட்டும் கண்டறிந்தது. இந்த சோதனைகள், ஒரு உடற்பயிற்சி திட்டத்தை வழக்கமான பராமரிப்புடன் (நீட்சி பயிற்சிகள்) ஒப்பிட்டன. இரண்டு சோதனைகளிலிருந்து (43 பங்கேற்பாளர்கள்) இணைக்கப்பட்ட முடிவுகள், வழக்கமான பராமரிப்பை விட உடற்பயிற்சி செயல்பாட்டில் ஒரு உயரிய சராசரி முன்னேற்றத்தை (ஒரு ஏ.எல்.எஸ்-க்குரிய அளவீட்டை பயன்படுத்தி அளவிடப்பட்டது) அளித்தது. இரண்டு குழுக்களுக்கு இடையே வேறு எந்த வேறுபாடுகளும் இருக்கவில்லை. உடற்பயிற்சி காரணமாக எந்த பாதகமான நிகழ்வுகளைப் பற்றியும் பதிவு இல்லை. ஏ.எல்.எஸ் கொண்ட மக்களுக்கு, எந்த அளவிற்கு உடற்பயிற்சி நன்மையளிக்கும் அல்லது தீங்களிக்கும் என்பதை தீர்மானிக்க மிகச் சிறிய ஆய்வுகளே இருந்தன. நாங்கள் தேடுதல்களை 2012 வருடத்தில் மேம்படுத்திய போது எந்த புதிய சோதனைகளையும் காணவில்லை. அதிகப்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information