முதுமை மூட்டழற்சி சிகிச்சைக்கு முழு மூட்டுச் சீரமைப்பு சிகிச்சையின் போது பின்புற கருசியேட் தசைநாரை தக்கவைத்தல் மற்றும் நீக்கப்படுதலை ஒப்பிடுதல்

காக்ரேன் ஒருங்கிணைவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் முதுமை மூட்டழற்சி உள்ளவரகளுக்கு இரண்டு வகை முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை விளைவுகள் குறித்து ஒரு திறனாய்வு நடத்தினர். ஒரு வகையில் பின்புற கருசியேட் தசைநார் நீக்கப்படுகிறது மற்றொன்றில் அது பாதுகாக்கப்படுகிறது. இது தொடர்பாக அனைத்து ஆய்வுகளையும் தேடியதில், அவர்கள் 1810 நோயாளிகளை உள்ளடக்கிய 17 ஆய்வுகளை கண்டறிந்தனர்.

இந்த ஆய்வு கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்புற கருசியேட் தசைநார் பாதுகாக்கப்பட முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையின் காண்பிப்பதாவது:

–தசைநார் நீக்கியதுடன் ஒப்பிடுகையில் இது இயக்க வரம்பு, வலி, செயல்பாட்டு திறன் மற்றும் நோயாளியின் மனநிறைவை மேம்படுத்தாது

எங்களிடம் பக்கவிளைவுகள் மற்ற சிக்கல்கள், குறிப்பாக அரிதான ஆனால் தீவிர பக்கவிளைவுகள் பற்றிய துல்லியமான தகவல் எதுவும் இல்லை. தொற்று மற்றும் வலி மேலும் மோசமடைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். இதனால் மேலும் அறுவைசிகிச்சை தேவைப்படலாம்

முதுமை மூட்டழற்சி என்றால் என்ன மற்றும் பின்புற கருசியேட் தசைநார் என்றால் என்ன?

முதுமை மூட்டழற்சி என்பது உங்கள் முழங்கால் அல்லது இடுப்பு போன்ற மூட்டுகளைத் தாக்கும் நோயாகும். உங்கள் மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது அபரிமிதமாக வளர்ந்து, அதன் பாதிப்பை சரி செய்ய முயற்சிக்கும். ஆனால், இதனை சரி செய்வதற்குப்பதில், நிலைமையைமேலும் செய்கிறது. உதாரணமாக, எலும்பானது உருவிழந்து,மூட்டுவலியையும், ஸ்திரமற்ற மூட்டையும் உண்டாக்கும். இது உங்கள் உடல் செயல்பாடு, அல்லது உங்கள் முழங்கால் மூட்டினை உபயோகிக்கும் செயல்பாட்டு திறனைப் பாதிக்கலாம்.

சிலருக்கு, முழங்கால் மூட்டு சேதம் மற்றும் வலி அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு கடுமையாக இருக்கலாம். முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையின் போது சேதமடைந்த மூட்டு மேற்பரப்பை உலோக மற்றும் பிளாஸ்டிக் உள்வைப்பு கொண்டு மருத்துவர் மாற்றுவார்.

ன்புற குருசியேட் தசைநார், முழங்கால் மூட்டின் ஸ்திரமான இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கிறது. முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையில் பின்புற குருசியேட் தசைநார் பாதுகாக்கப் படுகிறது அல்லது நீக்கப்படுகிறது. தசைநார் நிலை, தேர்ந்தெடுக்கப்பட்ட முழங்கால் மாற்று சிகிச்சைமுறை, அல்லது அறுவை சிகிச்சை நிபுணரின் விருப்பத்தை பொறுத்தே இது தேர்வு செய்யப்படுகிறது. தசைநார் நீக்கப்படும்போது மூட்டினை நிலைநிறுத்தவும், டிபியா எலும்பை தொடைஎலும்புடன் (femur) தொடர்புபடுத்தி நிலைநிறுத்தி , மூட்டிற்கு முன்நோக்கியும் பின்னோக்கியும் இயக்கம் அளிக்கவும், ஒருவித சிறப்பு ஆப்பு பயன்படுத்தப்படுகிறது.

கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்புற குருசியேட் தசைநார் பாதுகாக்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையினால் என்ன விளைவு ஏற்படுகிறது:

இயக்க வரம்பு (உங்களுடைய முழங்கால் அவ்வளவு தூரம் நீடிய நிலையில் இருந்து மடக்க முடிவது -இயக்க வரம்பு) இயக்க வரம்பு குறைவாக இருந்தால் அது மோசமான நிலை; உங்களால் முழுமையாக மடக்கவோ நீட்டவோ முடியாது)

பின்புற கருசியேட் தசைநார் அகற்றப்பட்டவர்களை ஒப்பிடும்போது அது அதனை பாதுகாக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் இயக்க வரம்பு 2 ° குறைவாக இருந்தது இது வாய்ப்பின் விளைவாக இருக்கலாம்.
கருசியேட் தசைநார் நீக்கப்பட்டவர்களில் இயக்க வரம்பு 118 ° (சாத்தியமான வரம்பு 0 ° to 140 °) ஆக இருந்தது
குருசியேட் தசைநார் நீக்கப்படாதவர்களில் இயக்க வரம்பு 116° (சாத்தியமான வரம்பு 0 ° to 140 °) ஆக இருந்தது.

மூட்டு வலி (குறைவான மதிப்பெண் என்றால் வலி மோசமானது)

‑பின்புற கருசியேட் தசைநார் பாதுகாக்கப்பட்டவர்கள் அவர்களின் வலியை அதனை நீக்கியவர்கள் போலவே மதிப்பிட்டனர். இந்த முடிவு வாய்ப்பின் விளைவாக இருக்கலாம்.

- பின்புற கருசியேட் தசைநார் சிகிச்சை பாதுகாக்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வர்கள் 0 முதல் 50 புள்ளிகள் வரையிலான ஒரு அளவீட்டில், அவர்களின் வலியை 48 புள்ளிகளாக பதிவிட்டனர்.

ஆரோக்கியம் சார்ந்த வாழ்க்கை தரம் மற்றும் செயல்பாட்டு திறன் அளத்தல் (அதிகம் என்றால் மோசமான நிலை)

‑பின்புற குருசியேட் தசைநார் பாதுகாக்கப்பட்டவர்கள் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை தசைநார் அகற்றப்பட்டவர்களைவிட ஒரு புள்ளி மோசம் என்று மதிப்பிட்டனர். இந்த முடிவு வாய்ப்பின் விளைவாக இருக்கலாம்.

- பின்புற கருசியேட் தசைநார் பாதுகாக்கப்பட்டவர்கள் 0-100 புள்ளி கொண்ட அளவுகோலில் தங்கள் வாழ்க்கை தரம் 16 புள்ளிகள் என்று மதிப்பிட்டுள்ளனர்.

- பின்புற கருசியேட் தசைநார் நீக்கப்பட்டவர்கள் 0 முதல் 100 புள்ளிகள் வரையிலான ஒரு அளவீட்டில், அவர்களின் வாழ்க்கை தரத்தை 15 என்று பதிவிட்டனர்.

நோயாளி மனநிறைவு (குறைவு என்றால் மோசமான நிலை)

பின்புற குருசியேட் தசைநார் பாதுகாக்கப்பட்டவர்கள் அவர்களின் மனநிறைவை தசைநார் நீக்கபட்டவர்கள் போலவே மதிப்பிட்டனர். இந்த முடிவு வாய்ப்பின் விளைவாக இருக்கலாம்.

- பின்புற கருசியேட் தசைநார் சிகிச்சை பாதுகாக்கப்பட்ட அல்லது நீக்கப்பட்டவர்கள் 0 முதல் 10 புள்ளிகள் வரையிலான ஒரு அளவீட்டில், அவர்களின் மனநிறைவு 8 புள்ளிகளாக பதிவிட்டனர்.

சிக்கல்கள் மற்றும் மேலும் அறுவை சிகிச்சை தேவைபடு்தல்

‑ பின்புற கருசியேட் தசைநார் பாதுகாக்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு இடையே திருத்தல் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை, சிக்கல்கள் அல்லது மற்ற அறுவை சிகிச்சைகளின் தேவைகளில் எந்த வித்தியாசமும் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சி.இ.பி.என்.ஆர் குழு

Tools
Information