பக்கவாத நோயாளிகளின் கரங்களுக்கான கட்டுப்படுத்துதல் மூலம் தூண்டப்பட்ட இயக்க சிகிச்சை

திறனாய்வு கேள்வி

நாங்கள் பக்கவாதத்திற்குப் பிறகு, அன்றாட செயல்பாடுகளைக் கையாளும் திறமை மற்றும் பக்கவாதத்தால் செயலிழந்த கைகளின் இயக்கத்தை மீட்டெடுத்தலில் கட்டுப்படுத்துவதன் மூலம் தூண்டப்பட்ட இயக்க சிகிச்சையின் (CIMT) விளைவுகளை மதிப்பீடு செய்ய விரும்பினோம்.

பின்புலம்

பக்கவாதத்திற்குப் பிறகு, நோயாளிகளுக்கு ஒரு கை செயலிழப்பு ஏற்படலாம். மேலும் சில இயக்க கட்டுப்பாடு இருந்தும் கூட, அவர்கள் பாதிக்கப்படாத கையை விட குறைவாக பயன்படுத்துவர். வாதம், எட்டுவது, பிடிப்பது மற்றும் பொருட்களைக் கையாள்வது போன்ற கைகளினால் செய்யகூடிய செயல்பாடுகளைக் கடினமாக்குகிறது. இதன் விளைவாக அன்றாட செயல்களான சாப்பிடுதல், குளித்தல், உடை உடுத்துதல்,கழிவறைகளைப் பயன்படுத்துதல் போன்ற காரியங்களைச் செய்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது. CIMT ன் போது பாதிக்கப்படாத கை பயன்படுத்த முடியாதவாறு கட்டுப்படுத்தப்படும். அதன் அர்த்தம் யாதெனில் அதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட கை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே ஆகும். செயலிழக்காத கையின் உபயோகம், கையுறை அல்லது ஒரு சிறப்பு கவண் பட்டை மூலம் தடுக்கப்படுகிறது. அன்றாட நடவடிக்கைகளின் திறனை மீட்க ஒரு பயனுள்ள கருவியாக CIMT இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஆய்வு பண்புகள்

நாங்கள், காக்ரேன் ஆராய்ச்சியாளர்கள் கொண்ட ஒரு குழு, மருத்துவ இலக்கியத்தில் விரிவான தேடல் மூலம் 1453 பங்கேற்பாளர்கள் கொண்ட 42 ஆய்வுகளைக் கண்டறிந்தோம். இந்த ஆதாரம் ஜனவரி 2015 நிலவரப்படியானது. இந்த ஆய்வுகளில் பங்கேற்றவர்களுக்கு அவர்களது பாதிக்கப்பட்ட கை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது மற்றும் பொதுவாக மணிக்கட்டு மற்றும் விரல்களை நீட்டிப்பது மூலம் தங்கள் பாதிக்கப்பட்ட கையைத் திறக்க முடிந்தது. நாள் தோறும் பங்கேற்பாளர்களின் பாதிக்கப்படாத கை கட்டுப்படுத்தப்பட்ட நேரம், மற்றும் பாதிக்கப்பட்ட கையை கொண்டு செய்யப்படும் செயலார்ந்த உடற்பயிற்சியின் அளவு போன்றவை அடிப்படையில் CIMT சிகிச்சை ஆராய்ச்சிகளுக்கு இடையே வேறுபட்டது. CIMT முக்கியமாக செயலார்ந்த இயன்முறை சிகிச்சைகள் அல்லது சில நேரங்களில் எந்த சிகிச்சையும் எடுக்காதவர்களுடன் ஒப்பிட்டது.

முக்கிய முடிவுகள்

42 ஆய்வுகள் பக்கவாதத்திலிருந்து மீட்புகுண்டான பல்வேறு அம்சங்களை மதிப்பீடு செய்தன. அனைத்தும் ஒரே விஷயங்களை அளவிடவில்லை. 344 பங்கேற்பாளர்கள் கொண்ட பதினொரு ஆய்வுகள் இயலாமைமீது CIMT விளைவுகளை (அன்றாட வாழ்க்கையில் கையைத் திறம்பட பயன்படுத்தல் ) மதிப்பீடுசெய்து CIMT பயன்படுத்துவதால் உண்ணல், குளித்தல், உடுத்தல்,கழிவறை பயன்படுத்தல் போன்ற அன்றாட நடவடிக்கைகளை கையாளும் திறனில் முன்னேற்றம் எதுவும் இல்லை என்று கண்டறிந்தன. 28 ஆய்வுகள் (858 பங்கேற்பாளர்கள்) CIMT, பாதிக்கப்பட்ட கையை பயன்படுத்தும் திறனை மேம்படுத்துமா என சோதனை செய்தன. CIMT, செயலார்ந்த இயன்முறை சிகிச்சையை விட அல்லது எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாததை விட பயனுள்ளதாக தோன்றியது.

சான்றின் தரம்

குறைந்த அளவிலான பங்கேற்பாளர்கள் ,மற்றும் ஆராய்ச்சிகள் பற்றிய விவரங்களை வெளியிடுதலில் உள்ள குறைபாடுகளின் நிமித்தம் ஒவ்வொரு விளைவுபயனை பற்றிய ஆதாரங்களின் தரம் மட்டுப்படுத்தப்பட்டது. ஆதாரங்களின் தரம் இயலாமையைப் பொறுத்தவரை தாழ்வானது என்றும் பாதிக்கப்பட்ட கையைப் பயன்படுத்தும் திறனைப் பொறுத்தவரை மிகவும் தாழ்வானது என்றும் நாங்கள் தீர்மானித்தோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: க. ஹரிஓம், வை. பிரகாஷ் &ஜெ.சரவண்குமார் மற்றும் சி.இ. பி.என்.அர் குழு

Tools
Information