தலைகவசங்கள்(ஹெல்மெட்ஸ்) ,மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் தலைக்காயம் மற்றும் இறப்பை(மரணம்) குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் சாலை போக்குவரத்துவிபத்துகள் குறிப்பாக தலைக்காயம் சார்ந்த விபத்துகள் சந்திக்கும் ஆபத்து அதிகம் உடையவர்கள். தலைக்கவசங்கள் (ஹெல்மெட்ஸ்) சுமார் அறுபத்தி ஒன்பது விழுக்காடு தலைக்காயம் ஏற்படும் ஆபத்தினையும் மற்றும் சுமார் நாற்பத்தி இரண்டு விழுக்காடு மரணம் ஏற்படும் ஆபத்தினையும் குறைக்கின்றது என்பதை பல ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய ஒரு திறனாய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளது. பல்வேறு வகையான தலைக்கவசத்தின்(ஹெல்மெட்) திறனை ஒப்பிட்டு அறிய போதுமான ஆதாரங்கள் இதுவரை இல்லை. தலைக்கவசங்கள்(ஹெல்மெட்ஸ்) முகக்காயங்களில் இருந்து பாதுகாக்கலாம் என்றும், அதனால் கழுத்தில் ஏற்படும் காயங்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றது. ஆனால் ஒரு முடிவான தீர்வுக்கு வர மேலும் பல ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றது. இந்த திறனாய்வு,உலகளாவில் ஓட்டுனர் பாதுகாப்புக்கருதி, ஹெல்மெட் பயன்பாட்டை தீவிரமாக ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஆதரிக்கிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ந.தீபாமோகன்பாபு மற்றும் சி. இ.பி.என்.அர் குழு

Tools
Information