முழங்கால் கீல்வாதத்திற்கான தளைப்பட்டைகள் மற்றும் சிம்புகள்

ஆராய்ச்சி கேள்வி

முழங்கால் கீல்வாதம் உள்ள நோயாளிகளுக்கான சிகிச்சையில் தளைப்பட்டைகள் மற்றும் கால் /கணுக்கால் சிம்புகளின் விளைவுகள் பற்றி ஆய்விலிருந்து எங்களுக்கு தெரிவது என்ன என்பதை அளிப்பதே இந்த காக்குரேன் திறனாய்வின் சுருக்கமாகும். மார்ச் 2014 க்கும் வரையான 13 ஆய்வுகளை கண்டறிந்தோம். (N = 1356), மற்றும் கூடுதலாக ஆறு ஆய்வுகளை (N = 529 பங்கேற்பாளர்கள்) இந்த மேம்படுத்தலில் சேர்த்தோம்.

ஆய்வு பண்புகள்

ஆரம்ப நிலை முதல் கடுமையான முழங்கால் கீல்வாதம் (கேல்க்ரேன் மற்றும் லாரன்ஸ் தரம் I - IV) இருக்கும் நோயாளிகளுக்கு, ஒரு முழங்கால் தளைப்பட்டை (வால்கஸ் முழங்கால் தளைப்பட்டை, நடுநிலை தளைப்பட்டை, நீயோப்ரின் ஸ்லீவ்) அல்லது ஒரு கால் சிம்பு (பக்கவாட்டாக அல்லது மைய நோக்கி மடிக்கப்பட்ட காலணி பின் பகுதியின் உள் துண்டுப் பகுதி, நடுநிலை துண்டுப் பகுதி, அல்லது நிலையற்ற அல்லது நிலையான விறைப்புத்தன்மை உடைய ஷூ) அல்லது எந்த சிகிச்சையும் அளிக்காமல் பதிவிடப்பட்டிருந்த ஆய்வுகளை நாங்கள் சேர்த்தோம்.

பின் புலம்: கீல்வாதம் என்றால் என்ன மற்றும் தளைப்பட்டைகள் மற்றும் கால் சிம்புகள் என்றால் என்ன?

கீல்வாதம் என்பது, கைகள், இடுப்பு, தோள்கள் மற்றும் முழங்கால்களை பாதிக்கும் மிகவும் பொதுவான வாத வடிவம் ஆகும். கீல்வாதத்தில், எலும்புகளின் இரு பக்கங்களையும் பாதுகாக்கும் குருத்தெலும்பு பாதிக்கப்பட்டு, வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். கீல்வாதம், முழங்காலின் வெவ்வேறான இடங்களில் ஏற்படும் அல்லது முழு முழங்காலையும் பாதிக்கும். பாதிக்கப்படும் பகுதியைப் பொறுத்து, கீல்வாதம் மூட்டுகளின் சீரமைப்பை மாற்ற முடியும்.

தளைப்பட்டைகள் மற்றும் சிம்புகள் ஆகியவை உங்கள் முழங்கால் மூட்டிற்கு ஆதரவாக அணியக் கூடிய சாதனங்கள் ஆகும். சிம்புகள், உங்கள் காலணிக்குள் வசதியாக பொருந்தக் கூடிய துண்டு தக்கைகள் ஆகும். உலோகம், பஞ்சு, பிளாஸ்டிக், ஏலாஸ்டிக் பொருள் மற்றும் பட்டைகள் மூலம் தளைப்பட்டைகள் செய்யப்படுகின்றன. ஒரு முழங்கால் சிம்பானது, அணியக் கூடியவருக்கு சிறப்பாக பொருந்தப் படக் கூடும்.

முக்கிய முடிவுகள்

முழங்கால் கீல்வாதம் உள்ள மக்களில் கீழ் வருவனவற்றை இந்த திறனாய்வு காட்டுகிறது.

தளைப்பட்டை அணிதலை தளைப்பட்டை அணியாமல் இருப்பதற்கு ஒப்பிடும் போது:


-12 மாதங்களுக்கு பிறகு, வலி குறைப்பதிலும், மற்றும் முழங்கால் செயல்பாடு மற்றும் வாழ்க்கைத்
தரத்தை மேம்படுத்துவதிலும் சிறிதளவு அல்லது எந்த வித்தியாசமும் இல்லை (குறைந்த-தர சான்று); மற்றும்
•இரண்டு குழுக்களிலும் விளைவு இல்லாததால், அனேக நோயாளிகளை அவர்களின் ஆரம்ப சிகிச்சையை நிறுத்திக் கொள்ள செய்கிறது.

விறைப்புத் தன்மை மற்றும் சிகிச்சை தோல்வி (அறுவை சிகிச்சை தேவை) ஆகியவை பதிவிடப்படவில்லை.

பக்கவாட்டாக மடிக்கப்பட்ட உள் தக்கை அணிதலை உள் தக்கை அணியாமல் இருப்பதற்கு ஒப்பிடும் போது:

• வலியை குறைப்பதில், சிறிதளவு அல்லது எந்த வித்தியாசமும் இல்லை (குறைந்த-தர சான்று)

செயல்பாடு, விறைப்புத் தன்மை, ஆரோக்கியம்-தொடர்பான வாழ்க்கைத் தரம், சிகிச்சை தோல்வி, மற்றும் பக்க விளைவுகள் ஆகியவை பதிவிடப்படவில்லை.

ஒரு பக்கவாட்டாக மடிக்கப்பட்ட காலணி உட்பகுதி தக்கை அணிதலை ஒரு நடுநிலை தக்கை அணிந்து இருப்பதற்கு ஒப்பிடும் போது:

-12 மாதங்களுக்கு பிறகு, பெரும்பாலும், வலி குறைப்பதிலும், மற்றும் செயல்பாடு, விறைப்புத் தன்மை, மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் சிறிதளவு அல்லது எந்த வித்தியாசமும் இல்லை (மிதமான-தர சான்று).சிகிச்சை தோல்வி மற்றும் பக்க விளைவுகள் பதிவிடப்படவில்லை.

ஒரு பக்கவாட்டாக மடிக்கப்பட்ட காலணி உட்பகுதி தக்கை அணிதலை ஒரு வெளிப்பக்க முழங்கால் தளைப்பட்டை அணிந்து இருப்பதற்கு ஒப்பிடும் போது:

• ஆறு மாதங்களுக்கு பிறகு, வலி குறைப்பதிலும், மற்றும் முழங்கால் செயல்பாட்டை மேம்படுத்துவதிலும் சிறிதளவு அல்லது எந்த வித்தியாசமும் இல்லை (குறைந்த-தர சான்று);விறைப்புத் தன்மை, ஆரோக்கியம்-தொடர்பான வாழ்க்கைத் தரம், சிகிச்சை தோல்வி, மற்றும் பக்க விளைவுகள் ஆகியவை பதிவிடப்படவில்லை.

பெரும்பாலும், எங்களுக்கு பக்க விளைவுகள் மற்றும் சிக்கல்கள் பற்றிய துல்லியமான தகவல் இல்லை. பக்க விளைவுகள், பின் முழங்கால் வலி, கீழ் முதுகு வலி, பாத வலி அல்லது தோல் எரிச்சல் போன்றவற்றை அடக்கும்.

சான்றின் தரம்

•முழங்கால் தளைப்பட்டை அணிந்த கீல்வாதம் கொண்ட மக்கள் சிறிதளவு அல்லது எந்த முன்னேற்றமும் அல்லாத வலி குறைவு, அதிகரித்த முழங்கால் செயல்பாடு, மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருப்பர் என்று குறைந்த-தர சான்று அறிவுறுத்துகிறது.

• பக்கவாட்டாக மடிக்கப்பட்ட காலணி உட்பகுதி தக்கை அல்லது நடுநிலை உட்பகுதி தக்கை அணிந்த முழங்கால் கீல்வாதம் கொண்ட மக்களில் சிறிதளவு அல்லது எந்த முன்னேற்றமும் அல்லாத வலி, முழங்கால் செயல்பாடு, மற்றும் விறைப்புத் தன்மையைக் கொண்டிருப்பர் என்று மிதமான-தர சான்று அறிவுறுத்துகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information