பக்கவாதத்தைத் தொடர்ந்த ஸ்பேசியல் நெக்லெக்ட்டிற்கான புலனறிவு புனர்வாழ்வு

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பக்கவாதத்திலிருந்து பிழைத்தவர்களை பாதிக்கும் ஒருபக்க ஸ்பேசியல் நெக்லெக்ட்டின் மீது புலனறிவு புனர்வாழ்வின் (தெரபி) நன்மை பற்றி தெளிவாக தெரியவில்லை. ஒரு பக்க ஸ்பேசியல் நெக்லெக்ட் என்பது, ஒரு நபரின் சுற்றுப்புறத்தின் ஒரு பாதியில், அவர்களின் பார்க்கும், கவனிக்கும் அல்லது அசையும் திறனை குறைக்கும் ஒரு பிரச்னையாகும். சாப்பிடுவது, படிப்பது மற்றும் உடை மாற்றுவது போன்ற அநேக அன்றாட நடவடிக்கைகளை செய்யும் திறனை அது பாதிக்கக் கூடும், மற்றும் ஒரு நபரின் பிறர்-சார்பின்மையை கட்டுப்படுத்தும். 628 பக்கவாதம் கொண்ட பங்கேற்பாளர்களை கொண்ட 23 ஆய்வுகள் மீதான எங்கள் திறனாய்வு, ஒருபக்க ஸ்பேசியல் நெக்லெக்ட்டிற்கென்று வடிவமைக்கப்பட்ட சிகிச்சையின் விளைவு பற்றி கூற பற்றாக்குறையான உயர் தர ஆதாரமே உள்ளது என கண்டது. அத்தகைய சிகிச்சை பயனளிக்கக் கூடும் என்பதற்கு வரம்பிற்குட்பட்ட ஆதாரத்தை நாங்கள் கண்டோம், ஆனால், ஆதாரத்தின் தரம் குறைவாக இருந்தது மற்றும் இந்த முடிவினை உறுதிப்படுத்த அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது. ஒருபக்க ஸ்பேசியல் நெக்லெக்ட் கொண்ட மக்கள், பொதுவான பக்கவாத புனர்வாழ்வு சேவைகளை தொடர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் உயர்-தர ஆராய்ச்சியில் பங்கு பெறுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்