ஒற்றை கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு குறைபிரசவத்தை தடுக்க படுக்கை ஓய்வு

குறைகால பிறப்பை படுக்கை ஓய்வு தடுக்கும் அல்லது தடுக்காது என்று கூற போதிய ஆதாரம் இல்லை.

மருத்துவமனையில் அல்லது வீட்டில் படுக்கை ஓய்வு முதல்க்கட்ட சிகிச்சையாக பரவலாக பயன்படுத்தப்பட்டாலும், இந்த மேம்படுத்தப்பட்ட திறனாய்வு குறைபிரசவத்தை தடுக்க படுக்கை ஓய்வு உதவலாம் என்று கூறவோ அல்லது மறுக்கவோ எந்த ஆதாரமும் கண்டறியவில்லை. கடின உழைப்பு அல்லது கடின செயல்பாட்டிற்கும் குறைபிரசவத்திற்கும் இடையில் உள்ள ஒப்புறவை பற்றி கண்காணிப்பு ஆய்வுமுறை அடிப்படையில் அறிந்து கொண்டதை பொருத்து தற்போதைய நடைமுறையில் பரிந்துரைக்கப் படுகிறது. பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்க்கு படுக்கை ஓய்வு பாதகமான விளைவுகள் அளிக்ககூடிய சாத்தியகூறுகள் இருப்பதனாலும், மேலும் நல வாழ்வு அமைப்புகளுக்கு அதிகரிக்கும் செலவுகளாலும், குறைபிரசவத்தை தடுக்க படுக்கை ஓய்வின் சாதக பாதகக் கருத்துகள் பற்றி முழுமையாக அவர்களிடத்தே விவாதிக்கப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர். குழு

Tools
Information