பொது மருத்துவர்கள் அளிக்கும் உளசமூகவியல் தலையீடுகள்

அநேக நோயாளிகள் தங்களின் உளசமூகவியல் பிரச்னைகளுக்கு அவர்களின் பொது மருத்துவர்களை அணுகுவர். இது தொடர்பாக இந்த நோயாளிகளுக்கு உதவ பொது மருத்துவர்களுக்கு சில கருவிகள் உதவியாக இருக்கும். பொது மருத்துவர்கள் அளிக்கும் உளசமூகவியல் தலையீடுகளின் திறன் அல்லது திறனின்மைக்கு எந்த உறுதியான ஆதாரத்தையும் திறனாய்வாளர்கள் காணவில்லை. திறனாய்வு செய்யப்பட்ட உளசமூகவியல் தலையீடுகளில், மனச்சோர்வுக்கான பிரச்னை-தீர்த்தல் யுக்தி ஒரு உறுதியளிக்க கூடிய கருவியாக பொது மருத்துவர்களுக்கு காணப்பட்டது. எனினும், நடைமுறை பழக்கத்தில் அதின் திறன் இன்னும் வெளிக்காட்டப்படவில்லை

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information
Share/Save