இதய செயலிலழப்பில் மனச்சோர்விற்கான உளவியல் சிகிச்சை தலையீடுகள்

இதய செயலிலழப்பு கொண்ட மக்களுக்கான உளவியல் சிகிச்சை தலையீடுகள் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்குமா மற்றும் விளைவை மேம்படுத்துமா என்பது தெரியவில்லை. இதய செயலிலழப்பு கொண்ட வயது வந்தவர்கள் எப்போதாவது மனச்சோர்வினால் அவதிப்படுவர். புலனுணர்வு-நடத்தை சிகிச்சை மற்றும் ஆலோசனை அல்லது ஆதரவு சிகிச்சையின் பிற வகைகள் போன்ற உளவியல் சிகிச்சை தலையீடுகள் மனச்சோர்வைக் குறைப்பதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ளன. துரதிரஷ்டவசமாக, இதய செயலிலழப்பு நோயாளிகளில் மனச்சோர்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட உளவியல் சிகிச்சை தலையீடுகளின் மீதான சீரற்ற சோதனைகளை இந்த திறனாய்வு காணவில்லை. எனினும், உளவியல் சிகிச்சை தலையீடுகளால் மனச்சோர்வின் அறிகுறிகளில் சிறிய குறைதல்கள் மற்றும் உடற்பயிற்சி கொள்திறனில் மேம்பாடுகளும் ஏற்படலாம் என்று குறைந்த கவனத்துடன் நடத்தப்பட்ட ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information