திடீர் பக்கவாதத்திற்கு நுண்துளை (குத்தூசி) மருத்துவ சிகிச்சை

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

திடீர் (acute) பக்கவாதத்திற்கு நுண்துளை (குத்தூசி)மருத்துவத்தின் திறன்களை பற்றிய தெளிவான சான்றுகள் இல்லை. பக்கவாதம் உட்பட கடுமையான மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு சீனாவில் நுண்துளை (குத்தூசி) மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது. திடீர் (acute) பக்கவாதத்திற்கு நுண்துளை (குத்தூசி) மருத்துவ சிகிச்சை பாதுகாப்பானதா, மற்றும் அது இறப்பு எண்ணிக்கையைக் குறைக்குமா அல்லது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைக்குத் தேவைப் படும் உதவிகளிலிருந்து அவர்கள் விடுபடுகிறார்களா என்று தீர்மானிக்க நாங்கள் சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களைத் திறனாய்வு செய்தோம். நுண்துளை (குத்தூசி) மருத்துவம் விளைவுபயன்களில் எந்த ஒரு தாக்கமும் ஏற்படுத்தவில்லை என்று இந்த திறனாய்வு காண்பித்தது. தீவிரமான எதிர் விளைவு நிகழ்வுகள் அரிதானவை. அவை சிகிச்சை எடுத்தவர்களில் நூறில் ஒருவருக்கு மட்டுமே ஏற்பட்டது. திடீர் (acute) பக்கவாதத்திற்கு நுண்துளை (குத்தூசி) மருத்துவ சிகிச்சையின் நன்மை மற்றும் தீங்கு பற்றி துல்லியமாக அறிந்துக்கொள்ள பெரியஅளவிலான சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனை முடிவுகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ. பி.என்.அர் குழு