ஆஸ்துமா கொண்ட குழந்தைகளுக்கான உளவியல் ரீதியான சிகிச்சை தலையீடுகள்

ஒரு முந்தைய திறனாய்வில், ஆஸ்துமா கொண்ட வயது வந்தவர்களில் உளவியல் ரீதியான சிகிச்சை தலையீடுகள் ஒரு முக்கிய பங்களிக்கிறது என்று தீர்மானிக்கப்பட முடியாமல் போனாலும், ஆஸ்துமாவில் உளவியல் காரணிகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன என்று எண்ணப்படுகிறது. இந்த திறனாய்வில், சேர்க்கை திட்டத்தை சந்தித்த பன்னிரண்டு ஆய்வுகள் இருந்தாலும்,அந்த ஆய்வுகள் சிறியவையாகவும் மற்றும் ஆய்வின் தரம் குறைந்ததாகவும் இருந்தது. உளவியல் ரீதியான சிகிச்சை தலையீடுகள் உச்ச பாய்வை மேம்படுத்தியது என்று ஒரு முடிவு சுட்டிக்காட்டியது. எனினும், இந்த கண்டுப்பிடிப்பு, பிற கூடுதலான சிறந்த தர ஆய்வுகளின் நிச்சயத்தை பெற வேண்டும். தற்போதைய இலக்கியத்தின் அடிப்படையில், உளவியல் ரீதியான சிகிச்சை தலையீடுகளுக்கு எந்த மேற்குறிப்பும் செய்ய முடியாது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information