இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் திடீர் (acute) பக்கவாதத்திற்கு குருதியுறைவு எதிர்ப்பு மருந்துகள் எதிர் குருதிச்சிறுதட்டுகளுக்கு எதிரான மருந்துகள்

இரத்த ஓட்ட தடையால் ஏற்படும் தீடிர் பக்கவாத நோயாளிகளுக்கு குருதியுறைவு எதிர்ப்பு மருந்துகள் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சையானது குருதிச்சிறுதட்டுகளுக்கு எதிரான மருந்துகளை காட்டிலும் எந்த நிகர நன்மையையும் தருவது கிடையாது. இரத்தக் கட்டியானது மூளையின் ஒரு பகுதிக்கான இரத்த விநியோகத்தைத் தடுப்பதால் இரத்த ஓட்ட தடையால் ஏற்படும் பக்கவாதம் ஏற்படுகின்றது. குருதியுறைவு எதிர்ப்பு மருந்துகள் மற்றும் குருதிச்சிறுதட்டுகளுக்கு எதிரான மருந்துகள் போன்ற இரத்தத்தை மென்மையாக்கும் மருந்துகளால், நாடிகள் தடைப்படுவதிலிருந்து அல்லது அவை மீள தடைப்படுவதிலிருந்து தடுக்க முடியும். மேலும் அவற்றால் காலில் ஆழமான பகுதியிலுள்ள நாளங்களில் உருவாகின்ற, பின் உடைந்து சுவாசப்பைகளுக்கு செல்லக் கூடிய , இரத்தக் கட்டிகளின் உருவாக்கத்தை தடுக்க முடியும். எவ்வாறெனினும், அத்தகைய மருந்துகள் இரத்தக் கசிவு பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன. இது அவற்றின் எத்தகைய நன்மைகளையும் புறந்தள்ளிவிடக் கூடியது. குருதிச்சிறுதட்டுகளுக்கு எதிரான மருந்துகள் (பிரதானமாக அஸ்பிரின் ) நீண்ட கால நன்மைகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதுடன் இரத்தஓட்ட தடையால் ஏற்படும் கடுமையான பக்கவாதத்திற்கான தரமான சிகிச்சையாகவுமுள்ளது. ஒட்டுமொத்தமாகவோ, அல்லது குறிப்பிட்ட நோயாளி பிரிவுகள் மீது உறைவெதிர்ப்பி மருந்துகள் அளிப்புத் திட்டம் இரத்த வட்டுகள் எதிரான மருத்துகளை விட நிகர நன்மைகள் அளிக்குமா என்பதை சோதிப்பதே இந்த ஆய்வின் நோக்கமாக. உறைவெதிர்ப்பி மருந்துகள் இரத்த வட்டுகளுக்கு எதிரான மருந்துகளைவிட மிகவும் சிறந்தது என்று கூற ஆதாரங்கள் எதுவும் இல்லை (உண்மையில் நீண்ட கால பின் தொடர்வில் உறைவெதிர்ப்பி மருந்துகள் இறப்பு எண்ணிக்கை சிறிய அளவு அதிகரித்தது) அஸ்பிரின் மட்டும் எடுத்துக்கொண்டவர்களை விட குறைந்த அளவு உறைவெதிர்ப்பி மருந்துகள் மற்றும் அஸ்பிரின் சேர்த்து எடுத்துக்கொண்டர்களுக்கு பயன்கள் உள்ளதுபோல் தோன்றுகிறது. இதனை மேலும் ஆராயவேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: சி.இ.பி.என்.அர் குழு, தனஞ்செயன் சஞ்சயன்

Tools
Information