நோய்த்தொற்றை தடுக்க அறுவை சிகிச்சை செய்த பகுதிகளில் ஏற்படும் புண்களை கட்டுதல்.

விமர்சன கேள்வி

இந்த ஆய்வின் நோக்கம் பல விதமான காயங்களை கட்டுதலின் பயன்கள் (அல்லது காயங்களை கட்டாமல் விட்டுவிடுதல்) ஆகியவை நோய்த்தொற்றை அறுவை சிகிச்சைக்கு பின் புண்களை தையல்கள் மூலமாகவும்,ஸ்டேபிள்ஸ்,கிளிப்கள் மற்றும் பசைகள் மூலமாகவும், மூடிய புண்களின் மீது நோய் தொற்றை பெற்றவர்கள் மீதான தாக்கத்தை கண்டறிதலாகும். மேலும் நாம் பலவகையிலான காயங்களைக் கட்டுதலின் மூலம் குறைவான வலி, குறைவான தழும்புகள் ஆகிவற்றைக் இதை ஏற்றுக் கொண்ட நோயாளிகள் மற்றும் தொழில் முறை சுகாதார நிபுணர்களை வைத்து ஆய்வை மேற்கொண்டோம்.

பின்னணி

பல இலட்சக்கணக்கான அறுவைசிகிச்சை செயல்முறைகள் பல உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான புண்கள் அவற்றின் விளிம்புகளை ஒன்றிணைத்து தையல்கள்,ஸ்டேபிள்ஸ்,கிளிப்ஸ், அல்லது பசை பயன்படுத்தி ஒட்டுதல் முறையில் குணப்படுத்தப்படுகின்றது.இது 'முதன்மையாக குணப்படுத்தும் முறை' என்று அழைக்கப்படுகிறது. பிறகு அடிக்கடி காயங்களைக் கட்டுதல் மூலம் உள்ளேயும் வெளியேயும் உள்ள சூழ்நிலைகளுக்கு ஒரு தடையாக மூடப்படுகிறது. மிகவும் சாத்தியமான நன்மை என்னவென்றால் புண்களை நோய் தொற்றிலிருந்து காக்கிறது( அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடம்). பல விதமான அறுவை சிகிச்சை செய்த புண்களை கட்டும்முறை உள்ளது. எனினும் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் நோய் தொற்றை தடுக்கும் ஒருவிதமான கட்டும்முறை மற்ற விதமான கட்டும்முறையை விட சிறந்தது என்று தெளிவாக கூற முடியவில்லை அல்லது உண்மையில் புண்களை கட்டும்முறையை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்ததோ என்று அறிய இயலவில்லை.

ஆய்வு பண்புகள்

எங்களுக்கு கிடைத்த எல்லா ஆய்வுகளின் தரத்தின் சான்றுகளை வைத்து அறுவைசிகிச்சை பகுதியில் நோய்த்தொற்றுகளினால் ஏற்படும் புண்களை கட்டுவதன் மூலமாக குணமடைதல் பற்றி கண்டறிவதே முதன்மையான எண்ணமாகும். 29 சீரற்ற கட்டுப்பாடு சோதனைகளில் (இது மிகவும் நம்பகமான சான்றுகளை வழங்கும்)இருந்து திறனாய்வு செய்து எடுக்கப்பட்டதகவல்கள். குறைவான ஆபத்துள்ள அறுவைசிகிச்சைப் பகுதிகளில் ஏற்படும் நோய்த்தொற்று (தூய்மையான அறுவைசிகிச்சை) மற்றும் அறுவைசிகிச்சை அதிக ஆபத்துள்ள( அசுத்தமாக சாத்தியமுள்ள) புண்களை கட்டுவதன் பயன்களை கண்டறிந்தோம்.

முக்கிய முடிவுகள்

அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ஏற்படும் நோய் தொற்றை குறைப்பதில் ஒரு விதமான காயங்களைக் கட்டும்முறை சிறந்தது அல்லது புண்களை மூடும் முறை குறைவான அளவில் நோய் தொற்று ஆபத்தை குறைக்கும் என்று தெளிவாக கூற இயலவில்லை என்று நாம் தெளிவான ஆதாரங்கள் மூலம் கண்டறிந்தோம். கூடுதலாக எந்த விதமான காயங்களை கட்டும் முறை தழும்புகள் குணமடைவதில் முன்னேற்றமும்,வலியை கட்டுக்குள் வைத்திருப்பது,நோயாளியின் ஏற்றுக்கொள்ளும்தன்மை அல்லது கட்டுகளை பிரிக்க எளிதாக இருப்பது குறித்து தெளிவான ஆதாரங்கள் இல்லை. தற்போது எப்படி புண்களை கட்டலாம் என்பதை நோயாளி மற்றும் மருந்தாளர் விருப்பம் மற்றும் கட்டுகளின் விலை ஆகிவற்றைக் கொண்டு முடிவுகளை எடுப்பவர்கள் தீர்மானிக்கலாம்.

ஆதாரங்களின் நிச்சயம்

முக்கியமாக குறிக்கப்படவேண்டியது இந்த திறனாய்வில் பல மிகச் சிறிய ஆய்வுகள் என்பதையும், நம்பகத் தன்மை மிகவும் குறைந்து மற்றும் குறைவான அல்லது மிகவும் குறைவான நிச்சயமற்ற தன்மை என்பதின் அர்த்தம் தற்போதைய தகவல்கள் நம்பகமற்றது என்பதாகும்.

செப்டம்பர் 2016 வரை மதிப்பீடு செய்யப்பட்டது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [சங்கீதா, ஜாபெஸ் பால்]

Tools
Information