கடுமையான மனநோய் கொண்ட மக்களுக்கான தொழிற்கல்வி புனர்வாழ்வு

கடுமையான மனநோயினால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான மக்கள் வேலை செய்ய விரும்புகின்றனர் மற்றும் இந்த இலக்கை அடைய உதவுவதற்கு, கட்டாயமான நெறிமுறை சமூக மற்றும் மருத்துவ காரணங்கள் உள்ளன. முன்-தொழிற் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவு ஆகியவை கடுமையான மன நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் வேலைவாய்ப்பு பெற உதவும் இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகளாக உள்ளன. வேலைவாய்ப்பு போட்டியில் நுழைவதற்கு முன்பதாக தயார்படுத்திக் கொள்ளுதல் அவசியம் என்பதே முன்-தொழிற்பயிற்சியின் முக்கிய கொள்கை ஆகிறது. மாறாக, வேலைவாய்ப்பு ஆதரவின் முக்கிய கொள்கை, வேலைவாய்ப்பு போட்டியில் வேலை அமர்வு மிக விரைவில் ஏற்பட வேண்டும், வேலை ஆதரவு மற்றும் பயிற்சி, அதனை தொடர வேண்டும் என்பதாகும். வேலை வாய்ப்பு ஆதரவு பெற்ற மக்கள், முன்-தொழிற்பயிற்சி பெற்றவர்களைக் காட்டிலும் (12 மாதங்களில், முன்-தொழிற்பயிற்சி பெற்றவர்களில் 12% வேலை பெற்றதை விட வேலைவாய்ப்பு ஆதரவு பெற்றவர்களில் 34% வேலை பெற்றனர்) வேலைவாய்ப்பு போட்டியில் கணிசமாக இருக்க முடிந்தது என்று இந்த திறனாய்வு கண்டது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம்,ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information