மிகை அழுத்த பிராணவாயு சிகிச்சை என்பது மல்டிபிள் ஸ்கலரோசிஸ்-சின் சிகிச்சைக்காக, ஒரு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறுகூடத்தில் மக்கள் சுத்தமான பிராண வாயுவை சுவாசிக்க செய்வதை உள்ளடக்கும்.

மல்டிபிள் ஸ்கலரோசிஸ் (எம்எஸ்) என்பது இளைய மற்றும் நடுத்தர-வயதினரை பாதிக்கும் நரம்பு மண்டலத்தின் ஒரு நாள்பட்ட நோயாகும். மீண்டும் மீண்டும் ஏற்படும் நரம்பு பகுதிகளின் பாதிப்பால், இது முன்னேறி செல்லும் பலவீனத்திற்கும் மற்றும் இயலாமைக்கும் வழி நடத்தும். மிகை அழுத்த பிராணவாயு சிகிச்சை (ஹைபர்பாரிக் ஆக்சிஜன் தெரபி, ஹச்ஓபிடி), ஒரு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறுகூடத்தில் (ஆழ் கடல் மூழ்காளர்கள் , கடலின் மேற்பரப்பிற்கு திரும்ப வரும் போது அவதிப்படும் அழுத்த பிரச்னைகளுக்கு பயன்படுத்துவதை போன்று) மக்கள் சுத்தமான பிராண வாயுவை சுவாசிக்க செய்வதை உள்ளடக்கும். பிராண வாயு இல்லாமையால் பாதிக்கப்பட்ட நரம்புகள் எம்எஸ்-ஐ மேலும் மோசமாக்கும் தருணத்தில், ஹச்ஓபிடி சில சமயங்களில் எம்எஸ்-ற்கு பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இந்த கோட்பாடு நிரூபிக்கப்படவில்லை. ஹச்ஓபிடி, எம்எஸ்-சின் இயலாமையை மேம்படுத்தி மற்றும் அதின் முன்னேற்றத்தை மாற்றியமைக்கும் என்பதற்கு ஒன்பது சோதனைகளின் இந்த திறனாய்வு எந்த நிலையான ஆதாரத்தையும் காணவில்லை. மேற்படியான ஆராய்ச்சிக்கு சிறிது தேவை உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information