கீல்வாதத்திற்கான வாய்வழி மூலிகை சிகிச்சைகள்

பின் புலம்: கீல்வாதம் என்றால் என்ன மற்றும் மூலிகை சிகிச்சை என்றால் என்ன?

கீல்வாதம் (OA) என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது வளர்ந்து, அதன் பாதிப்பை சரி செய்ய முயற்சிக்கும். ஆனால், எலும்பு வழக்கதிற்கு மாறாக வளர்ந்து இந்நிலையை சரி செய்வதற்கு பதிலாக, மோசமடையச் செய்கிறது. உதாரணமாக, எலும்பானது உருவிழந்து, மூட்டுவலியையும், மற்றும் அசைவின்மையை உண்டாக்ககூடியது. OA உங்கள் உடல் செயல்பாடு, குறிப்பாக உங்கள் மூட்டுகள் செயல்பாட்டு திறனை பாதிக்கும்.

மூலிகை மருந்துகள் என்பது தரைக்கு மேலே அல்லது நிலத்தடியிலுள்ள தீவிர செயல்திறன் கொண்ட தாவர பாகங்களின் ஆக்கக் கூறுகள் அல்லது பிற தாவர பொருள், அல்லது இவற்றின் சேர்க்கைகள் கொண்ட கச்சா நிலையிலோ அல்லது ஆலை தயாரிப்பாகவோ, (உதாரணமாக சாறு, எண்ணெய்கள், டிங்க்சர்கள் ) தயாரிப்பில் இறுதியானதும் பெயர் முத்திரை இடப்பட்டதுமான மருந்துப் பொருட்கள், என வரையறுக்கப்பட்டுள்ளது

ஆய்வு பண்புகள்

கீல்வாதத்திற்கு மூலிகை மருந்துகளை வாய்வழி உட்கொள்ளும் நோயாளிகளுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வுகள் மூலம் நாங்கள் அறிந்து கொண்டதை இந்த புதுப்பிக்கப்பட்ட காக்குரேன் திறனாய்வு சுருக்கம் வழங்குகிறது. ஆகஸ்ட் 2013 வரை தொடர்புடைய அனைத்து ஆய்வுகளையும் தேடிய பிறகு, கடந்த திறனாய்விலிருந்து இதுவரை 45 புதிய ஆய்வுகளைச் சேர்த்து ,பெரும்பாலும் லேசான முதல் மிதமான இடுப்பு கீல்வாதம் அல்லது முழங்கால் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட , 5980 பங்கேற்பாளர்கள் கொண்ட மொத்தம் 49 ஆய்வுகள் (23 மூலிகை தலையீடுகள் ) எங்களுக்கு கிடைத்தது. 33 வேறுபட்ட தாவர மருந்து பொருட்கள் மருந்து போலி அல்லது தீவிர தலையீடு கட்டுப்பாடுகளோடு ஒப்பிடப்பட்டது . பெரும்பாலான ஒப்பீடுகளுக்கு ஒரே ஒரு ஆய்வே இருந்தது. எனவே நாங்கள் முடிவுகளை அறிவிப்பதை இங்கு போஸ்வேலியாசெரட்டா (ஒற்றைமூலிகை), அவகாடோ.சோயாபீன்அன்சபானிபியபில்ஸ்(ASU) (இரு மூலிகை சேர்க்கை)., விளைபொருட்களுக்கான பன்மைஆய்வுகளோடு மட்டும் நிறுத்திக்கொண்டோம்.

முக்கிய முடிவுகள்

போஸ்வெல்லியா செரட்டா (Boswellia serrata)

0-100 புள்ளிகள் கொண்ட அளவீட்டில் வலி (குறைந்த புள்ளிகள் என்றால் குறைந்த வலி):

- செறிவூட்டப்பட்ட போஸ்வெல்லியா செரட்டா சாறு 100 மிகி பயன்படுத்தியவர்களை மருந்தற்ற குளிகை சிகிச்சை எடுத்தவர்களுடன் ஒப்பிடுகையில், அவர்களின் வலி 90 நாட்களில் 17புள்ளிகள் குறைந்ததாக(8 முதல் 26 புள்ளிகள் குறைவு) (17விழுக்காடு பூரண முன்னேற்றம் ) மதிப்பீடு செய்தனர்.

‑செறிவூட்டப்பட்ட போஸ்வெல்லியா செரட்டா 100 மிகி பயன்படுத்தியவர்கள் வலியை 23 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.

- மருந்தற்ற குளிகை எடுத்துக்கொண்டவர்கள் தங்களின் வலியை 40 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.

0 முதல் 100 புள்ளிகள் என்ற அளவுகோலில் உடல் செயல்பாடு (குறைந்தளவு புள்ளிகள் என்றால் சிறந்த உடல் செயல்பாடு):

- செறிவூட்டப்பட்ட போஸ்வெல்லியா செரட்டா சாறு 100 மிகி பயன்படுத்தியவர்கள் மருந்தற்ற குளிகை சிகிச்சை எடுதவர்களுடன் ஒப்பிடுகையில், அவர்களின் உடற்சார்ந்த செயல்பாட்டு திறன் 90 நாட்களில் 0-100 புள்ளிகள் கொண்ட அளவீட்டில்,8 புள்ளிகள் (2 முதல் 14 புள்ளிகள் குறைவாக) மேன்மையுற்றது (8% முழுமையான முன்னேற்றம்)

செறிவூட்டப்பட்ட போஸ்வெல்லியா செரட்டா சாறு 100 மிகி பயன்படுத்தியவர்கள் உடல் செயல்பாட்டை 25 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.

- மருந்தற்ற குளிகை எடுத்துக்கொண்டவர்கள் தங்களின் உடற்சார்ந்த செயல்பாட்டு திறனை 33 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.

அவகாடோ..சோயாபீன்அன்சபானிபியபில்ஸ் Avocado-soyabean unsaponifiables (ASU) (ASU) தயாரிப்பு Piascledine®

0-100 புள்ளிகள் கொண்ட அளவீட்டில் வலி (குறைந்த புள்ளிகள் என்றால் குறைந்த வலி):

- ASU 300 மி.கி. பயன்படுத்தியவர்கள் மருந்தற்ற குளிகை சிகிச்சை எடுதவர்களுடன் ஒப்பிடுகையில், அவர்களின் வலியை 8 புள்ளிகள் குறைவாக (1 முதல் 16 புள்ளிகள் குறைவாக) 0-100 புள்ளிகள் கொண்ட அளவீட்டில், (8% முழுமையான முன்னேற்றம்) மதிப்பீடு செய்தார்கள்.

-ASU 300 மி.கி பயன்படுத்தியவர்கள் தங்களின் வலியை 33 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.

- மருந்தற்ற குளிகை எடுத்துக்கொண்டவர்கள் தங்களின் வலியை 41 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.

0 முதல் 100 புள்ளிகள் என்ற அளவுகோலில் உடல் செயல்பாடு (குறைந்தளவு புள்ளிகள் என்றால் சிறந்த உடல் செயல்பாடு):

- ASU 300 மி.கி. பயன்படுத்தியவர்கள் மருந்தற்ற குளிகை சிகிச்சை எடுதவர்களுடன் ஒப்பிடுகையில், அவர்களின் உடற்சார்ந்த செயல்பாட்டு திறன் 3 முதல் 12 மாதத்தில் 7 புள்ளிகள் குறைவாக (2 முதல் 12 புள்ளிகள் குறைவாக) 0-100 புள்ளிகள் கொண்ட அளவீட்டில், (7% முழுமையான முன்னேற்றம்) மதிப்பீடு செய்தார்கள்.

-ASU 300 மி.கி பயன்படுத்தியவர்கள் தங்களின் உடற்சார்ந்த செயல்பாட்டு திறன் 40 mm என மதிப்பீடு செய்தார்கள்.

- மருந்தற்ற குளிகை எடுத்துக்கொண்டவர்கள் தங்களின் உடற்சார்ந்த செயல்பாட்டு திறனை 47 mm என மதிப்பீடு செய்தார்கள்.

ஆதாரங்களின் தரம்

கீல்வாதத்திற்கு போஸ்வெல்லியா செரட்டா வலி மற்றும் செயல்பாடுகளை சற்று மேம்படுத்தலாம் என்பதற்கு உயர்-தரம் கொண்ட ஆதாரங்கள் உள்ளன. மேற்கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சி இந்த மதிப்பீட்டை மாற்றக் கூடும்.

அவகாடோ சோயாபீன்அன்சபானிபியபில்ஸ் avocado-soybean unsaponifiables (ASU) வலி மற்றும் செயல்பாடுகள் திறனை சற்று முன்னேற்றக் கூடும் ஆனால் மூட்டு இடைவெளியை பாதுகாக்க உதவாது என்பதற்கு மிதமான-தர சான்று உள்ளது. மேற்கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சி இந்த மதிப்பீட்டை மாற்றக் கூடும்.

கீல் வாத வலி அல்லது செயல்பாட்டு திறன் அல்லது மூட்டு கட்டமைப்பு சேதம் மெதுவாக முன்னேற்றமடைவதை மற்ற வாய்வழி மூலிகைத் தயாரிப்புகள் மேம்படுத்தும் என்பதை எங்களால் திட்டவட்டமாக கூற முடியவில்லை.ஏனெனில் இதற்கான ஆதாரம் ஒரு ஆராய்ச்சிக்குள் வரையறுக்கப்பட்டது அல்லது ஒன்று திரட்ட முடியாத ஆராய்ச்சிகள் மற்றும் குறைந்த தரம் முதல் மிக குறைந்த தரம் உள்ள ஆதாரங்களை உடையதாய் உள்ளது. வாழ்க்கை தரம் அளவிடப்பட்டவில்லை.

மூலிகை சிகிச்சைகள், பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம், ஆனால் அதற்கான ஆபத்துக்கூறை அதிகரிக்குமா என்பது தெளிவற்றதாக உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information