கீல்வாதத்திற்குக் குளுக்கோசமீன்

கீல்வாதத்திற்கு குளுக்கோசமீன் அளிக்கும் விளைவுகளை குறித்து ஆராய்ச்சிகள் மூலம் நாங்கள் அறிந்து கொண்டதை இந்த காக்குரேன் மறுஆய்வு சுருக்கம் வழங்குகிறது.  

இடுப்பு அல்லது முழங்காலில் கீல்வாதத்தல் பாதிக்கப்பட்டவர்கள் குளுக்கோசமீன்:

- வலியை குறைக்க கூடும்

- உடல் செயல்பாட்டை மேம்படுத்தலாம்

- பக்க விளைவுகள் வராமல் இருக்கலாம்

கீல்வாதம் மற்றும் குளுக்கோசமீன்என்றால் என்ன?

கீல்வாதம் என்பது, கைகள், இடுப்பு, தோள்கள் மற்றும் முழங்கால்களை பாதிக்கும் மிகவும் பொதுவான வாத வடிவம் ஆகும். இந்த மூட்டுவாதத்தில் மூட்டுஅமைப்பில் ஈடுபடும் எலும்புகளின் முனைகளை பாதுகாக்க முனைகளின் பாதுகாக்கும் குருத்தெலும்பு (Cartilage) சேதமடைந்து வலி மற்றும் வீக்கத்தை உண்டுபண்ணுகின்றது. மருந்து மற்றும் மருந்தில்லா சிகிச்சைகள் வலி மற்றும்/அல்லது வீக்கத்தை தணிக்க பயன்படுத்தப்படுகின்றன.

குளுக்கோசமீன் உடலில் இயற்கையாக காணப்படும். இது குருத்தெலும்பு கட்டமைப்பின் கட்டுமான பொருட்களில் ஒன்றாக உடலால் பயன்படுத்தப்படுகிறது.  மேலும் குளுக்கோசமீன் கூடுதல் ஊட்டத்திற்கான ஒரு சத்து மாத்திரையாக உணவோடு எடுத்துக்கொள்ளப்படுகிறது அல்லது சில நேரங்களில் ஒரு ஊசி மருந்தாக குளுக்கோசமீன் எடுத்துக்கொள்ளப்படுகிறது.  இது மற்ற உபச்சத்துகளுடன் (கான்ட்ராய்டிண் போன்ற) இணைந்ததாகவோ அல்லது தனியாக குளுக்கோசமீன் ஹைட்ரோகுளோரைடு அல்லது குளுக்கோசமீன் சல்பேட் ஆகிய வடிவங்களில் வருகிறது.  வழக்கமாக பரிந்துரைக்கும் அளவு ஒரு நாளைக்கு மூன்று 500 மிகி அல்லது நாள் ஒன்றுக்கு 1500 மி.கி.

ஐரோப்பாவில், குளுக்கோசமீன் சுகாதார வழங்குநர்கள் மூலம் பரிந்துரைக்கப்படுகிறது.  ஆனால் வட அமெரிக்காவில், மக்கள் மருந்து சீட்டு இல்லாமல் குளுக்கோசமீன் உபச்சத்து வாங்க முடியும்.  இதன் பொருள் என்னவெனில் வட அமெரிக்காவில் குளுக்கோசமீன் விற்பனை ஒழுங்குமுறைப் படுத்தப்படவில்லை ஆகையால் அந்த மாத்திரைகள் உண்மையிலேயே அட்டையில் விவரித்தது போல உண்மையான அளவு இருந்தாலும் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். 

6 மாதத்தில் என்ன ஆகும் என்பதற்கான சிறந்த மதிப்பிடு:

வலி:குளுக்கோசமீன் அல்லது போலி மாத்திரைகள் எடுத்துக் கொண்டவர்களுக்கு ஒரே அளவு வலி குறைந்தது என்று உயர் தரமான ஆய்வுகள் காண்பித்தன. அனைத்து ஆராய்ச்சிகளையும் ஒன்று சேர்த்து (பழைய மற்றும் தரம் குறைந்த ஆய்வுகள்) ஆய்வு செய்தால் போலி மாத்திரைகள் எடுத்துக்கொண்டவர்களை விட குளுக்கோசமீன் எடுத்துக்கொண்டவர்களுக்கு வலி குறைந்தது என்று தெரியவந்தது.

போலி மாத்திரைகள் எடுத்துக்கொண்டவர்களுக்கு 0 முதல் 100 புள்ளிகள் வரையிலான அளவுகோலில் , அவர்களின் வலிஅளவு , 7 புள்ளிகளாக இருந்தது. போலிசிகிச்சையைவிட குளுக்கோசமீன் எடுத்துக்கொண்டவர்களுக்கு போலி மாத்திரைகள் எடுத்துக்கொண்டவர்களைவிட வலியில் 10 புள்ளிகள் அளவில் மேம்பாடு ஏற்படலாம். 

ரொட்ட(Rotta) வணிகச்சின்னம் உள்ள குளுக்கோசமீன்னை மட்டும் சோதித்த அனைத்து ஆராய்ச்சிகளும் (பழைய மற்றும் தரம் குறைந்த ஆய்வுகள் உட்பட ) போலி மாத்திரைகள் எடுத்துக்கொண்டவர்களை விட வலிநிவாரணத்தில் மேம்பாடு இருந்தது எனக் காண்பித்தன. போலி மாத்திரைகள் எடுத்துக்கொண்டவர்களுக்கு 0 முதல் 20 புள்ளிகள் வரையிலான ஒரு அளவீட்டில், வலி, 6 புள்ளிகளாக இருந்தது. ரொட்டா பிராண்ட் குளுக்கோசமைனின் எடுத்தவர்கள் தங்கள் வலியை குளுக்கோசமைன் எடுத்துக் கொள்ளாதவர்களைவிட 3 புள்ளிகள் குறைவாக இருப்பதாக மதிப்பீடு செய்தனர்.

செயல்பாட்டு திறன்: ஒருவகை அளவு கோலில் அளக்கும்போது போலி மாத்திரைகளைவிட குளுக்கோசமீன், செயல்பாட்டு திறனை அதிக அளவு மேம்படுத்தியது என்றும் மற்றொருவகை அளவுகோலில் அளக்கும்போது குளுக்கோசமீன் செயல்பாட்டு திறனை போலி மாத்திரைகள் அளவே மேம்படுத்தியது என்றும் உயர் தர ஆய்வுகள் காண்பித்தன.

ரொட்ட(Rotta) வணிகச்சின்னம் உள்ள குளுக்கோசமீன்னை மட்டும் சோதித்த அனைத்து ஆராய்ச்சிகளும் (பழைய மற்றும் தரம் குறைந்த ஆய்வுகள் உட்பட) போலி மாத்திரைகள் எடுத்துக்கொண்டவர்களை விட செயல் திறனை மேம்படுத்தியது எனக் காண்பித்தன. போலிமாத்திரை சிகிச்சை பெற்றவர்களுக்கு 0 முதல் 68 புள்ளிகள் வரையிலான ஒரு அளவு கோலில் , செயல் திறன் , 22 புள்ளிகளாக இருந்தது. ரொட்டா பிராண்ட் குளுக்கோசமைன் எடுத்தவர்களுக்கு குளுக்கோசமைன் எடுத்து கொள்ளாதவர்களோடு ஒப்பிடும்போது செயல்பாட்டு திறன் 2 புள்ளிகள் மேம்பட்டு இருந்தது.

பக்க விளைவுகள் வந்தவர்களின் எண்ணிக்கை வித்தியாசப் படவில்லை. வயிற்று கோளாறு மற்றும் பிற மூட்டு வலி போன்றவை முக்கியமாக பக்க விளைவுகளுள் அடங்கும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ. பி.என்.அர்

Tools
Information