முடக்கு வாதத்திற்கான வெப்ப சிகிச்சைமுறை (சுடு சிகிச்சை)

வெப்பசிகிச்சை முறை என்பது முடக்குவாதச் சிகிச்சைகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் நடைமுறைகளில் ஒன்றாகும். வெப்பசிகிச்சை நடைமுறைகளானது, வேறுபட்ட வெப்பநிலைகள் கொண்ட மேலோட்ட ஈரவெப்ப ஒத்தடங்கள் (வெப்ப தொகுதிகள்), குளிர்சிகிச்சை (பனி தொகுதிகள்), வெண்மெழுகு மற்றும் பாரடிக் (Faradic) குளியல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த ஆய்வுரையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து ஆய்வுகளும் (எண்ணிக்கை=7) சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை ஆய்வுகளாகும்.(RCT:Randomised Controlled Trials)

கட்டுப்பாடு (சிகிச்சைஇல்லாமை) அல்லது செயல் சிகிச்சையை ஒப்பிடும் போது வெப்பம் மற்றும் பனி தொகுதி பயன்பாடுகள்; மற்றும் பாரடிக் குளியல்கள் ஆகியவற்றால், மூட்டு வீக்கம், வலி, மருந்து உட்கொள்ளுதல், மூட்டு இயக்க வரம்பு, கைப்பிடி வலிமை, கை செயல்பாடு அல்லது நோயாளி விருப்பம் போன்ற நோய் செயற் நிலைகளின் புறநிலை அளவீடுகளில் குறிப்பிடத்தக்க விளைவுகள் இல்லை என்பதை இந்த ஆய்வுரை கண்டறிந்தது. எனினும், கட்டுப்பாட்டை(சிகிச்சைஇல்லாமை) ஒப்பிடும் போது, கைவாதத்திற்கு தொடர்ச்சியாக நான்கு வாரங்களுக்கு அளிக்கப்பட்ட வெண்மெழுகு குளியல்கள் மட்டும், மூட்டு இயக்க வரம்பு, கிள்ளு செயல், கைப்பிடி வலிமை, எதிர்ப்பற்ற இயக்கத்தின் போது ஏற்படும் வலி, மூட்டு விறைப்பு போன்ற புறநிலை அளவீடுகளில் நேர் நிலையான முடிவுகளை அளித்தது.

எந்தவொரு பலன் அளவீடுகளிலும், மெழுகு மற்றும் நோய் தீர்க்கும் இயல்புடைய நுன்னோலிக்கிடையிலோ அல்லது மெழுகு மற்றும் பாரடிக் குளியல்களுடன் இணைந்து அளிக்கப்பட்ட நுன்னொலிக்கிடையிலோ குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை. முடக்குவாத நோயாளிகளுக்கு, வெப்பசிகிச்சை முறையை ஒரு வலி நிவாரண சிகிச்சையாகவோ அல்லது உடற்பயிற்சியுடன் இணைந்த ஒரு சேர்ப்பு சிகிச்சையாகவோ பயன்படுத்தலாம் என்று ஆய்வுரையாளர்கள் தீர்மானித்தனர். குறிப்பாக,கை வாத சிகிச்சைக்கு மெழுகு குளியல்கள் பயனுள்ளதாக தோன்றுகிறது. இம்முடிவுகள் தரம் குறைந்த சோதனைகள் போன்ற செயல்முறையியல் கருத்துநிலைகளின் வரம்பிற்குட்பட்டது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி. இந்த மொழிபெயர்ப்பு குறித்த கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: cynthiaswarnalatha@gmail.com (அல்லது) atramalingam@gmail.com.

Tools
Information