முழங்கால் கீல்வாதத்திற்குச் சருமத்தினூடே மின்வழி நரம்பு தூண்டுதல் சிகிச்சை (ட்ரான்ஸ் க்யுடேனியஸ் எலக்ட்ரிகல் நெர்வ் ஸ்டிமுலேசன்)

கீல்வாதத்திற்கு சருமத்தினூடேயான மின்வழி நரம்பு தூண்டுதல் சிகிச்சையின் (ட்ரான்ஸ் க்யுடேனியஸ் எலக்ட்ரிகல் நெர்வ் ஸ்டிமுலேசன்) திறன்கள் குறித்து ஆராய்ச்சியின் மூலம் நாங்கள் அறிந்து கொண்டதை இந்த காக்ரேன் திறனாய்வு சுருக்கம் மூலம் வழங்குகிறோம்.

இந்த ஆய்வு, கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக தெரிவிப்பதாவது:

-சருமத்தினுடேயான மின்வழி நரம்பு தூண்டுதல் சிகிச்சை (ட்ரான்ஸ் க்யுடேனியஸ் எலக்ட்ரிகல் நெர்வ் ஸ்டிமுலேசன்) வலியை குறைக்கிறது அல்லது முழங்காலின் பயன்பாட்டு செயல்திறனை அதிகப்படுத்துகிறது என்பது நிச்சயமற்றது, ஏனெனில் அவை குறைந்த தரமுடைய ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டவை.  
சருமத்தினுடேயான மின்வழி நரம்பு தூண்டுதல் சிகிச்சை (ட்ரான்ஸ் க்யுடேனியஸ் எலக்ட்ரிகல் நெர்வ் ஸ்டிமுலேசன்) அளிப்பதனால் பக்க விளைவுகள் ஏற்படாதிருக்கலாம். பக்க விளைவுகள் மற்றும் சிக்கல்கள் பற்றி துல்லியமான விவரம் எங்களுக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை. குறிப்பாக இது அரிதான ஆனால் தீவிர பக்க விளைவுகளுக்குப்வி பொருந்தும். 

கீல்வாதம் என்றால் என்ன? மற்றும் சருமத்தினூடேயான மின்வழி நரம்பு தூண்டுதல் சிகிச்சை (ட்ரான்ஸ் க்யுடேனியஸ் எலக்ட்ரிகல் ஸ்டிமுலேசன்) என்றால் என்ன?

கீல்வாதம் என்பது உங்கள் முழங்கால் போன்ற மூட்டுகளைத் தாக்கும் நோயாகும். உங்கள் மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது வளர்ந்து, அதன் பாதிப்பை சரி செய்ய முயற்சிக்கும். ஆனால், எலும்பு வழக்கத்திற்கு மாறாக வளர்ந்து இந்நிலையை சரி செய்வதற்குப் பதிலாக, மோசமடையச் செய்கிறது. உதாரணமாக, எலும்பானது உருவிழந்து, மூட்டுவலியையும், மற்றும் ஸ்திரமற்ற மூட்டையும் உண்டாக்கும். இது உங்கள் உடல் செயல்பாட்டை , குறிப்பாக உங்கள் முழங்காலின் செயல்பாட்டு திறனைப் பாதிக்கும்.

TENS போன்ற சருமத்தினூடேயான மின்வழி நரம்பு தூண்டுதல் சிகிச்சை (ட்ரான்ஸ் க்யுடேனியஸ் எலக்ட்ரிகல் நெர்வ் ஸ்டிமுலேசன்) சருமம் வழியாக மின்சாரம் அளித்து வலியை குறைக்கும் முறைகளில் ஒன்று ஆகும். சருமத்தினுடேயான மின்வழி நரம்பு தூண்டுதல் சிகிச்சைக்கான (ட்ரான்ஸ் க்யுடேனியஸ் எலக்ட்ரிகல் நெர்வ் ஸ்டிமுலேசன்) இயந்திரங்கள் பொதுவாக சிறியவையாகவும் இரு மின்முனை கொண்ட பேட்டரியால் இயக்கப்படுபவையாகவும் இருக்கும். மின்முனை என்பது மின்சாரத்தைச் செலுத்த உதவும் கம்பிகள். பொதுவாக, உங்களுக்கு வலிஉள்ள பகுதியில் தோலின்மேல், இயந்திரத்தில் இருந்து வரும் இரண்டு மின்முனைகள் இணைக்கப்படும். உங்கள் மருத்துவர், அல்லது இயன்முறை மருத்துவர் இதனை எவ்வாறு உபோகிப்பது என்று காண்பிப்பார் . பெரும்பான்மையான இயந்திரங்கள் வீட்டிலேயே பயன்படுத்த தக்கவை.

நான்கு வாரங்கள் சருமத்தினுடேயான மின்வழி நரம்பு தூண்டுதல் சிகிச்சை (ட்ரான்ஸ் க்யுடேனியஸ் எலக்ட்ரிகல் நெர்வ் ஸ்டிமுலேசன்) பெறும் கீழ்வாதம் பாதிப்புள்ள மக்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கான சிறந்த மதிப்பீடு:

வலி

-சருமத்தினுடேயான மின்வழி நரம்பு தூண்டுதல் சிகிச்சை பெற்ற மக்களுக்கு சிகிச்சைக்குப்பின் நான்கு வாரங்களில் , 0(வலி இல்லை ) முதல் -10 (உச்சக்கட்ட வலி)வரையிலான அளவுக்கோலில், 2 என்ற அளவில் தங்கள் வலியில் முன்னேற்றமடைந்ததாக மதிப்பிட்டனர்.

போலி மின்வழி உணர்வுத் தூண்டல் பெற்றவர்கள் நான்கு வாரங்கள் கழித்து, அவர்களின் வலியை 0 (வலி இல்லை)-10(உச்சக்கட்ட வலி) என்ற ஒரு அளவுக்கோலில், 2 என்ற அளவில் முன்னேற்றமடைந்ததாக மதிப்பிட்டனர்.

- மின்வழி உணர்வுத் தூண்டல் பயன்படுத்தியபோது சராசரிக்கு மேலான முன்னேற்றம் எதுவும் மக்களுக்கு இல்லை. இவர்களை ஒரு போலி மின்வழி உணர்வுத் தூண்டல் இயந்திரம் பயன்படுத்தப்படுதியவர்களோடு அல்லது தங்களது வழக்கமான சிகிச்சைகள் (0% வேறுபாடு) எடுத்துக் கொண்டவர்களோடு ஒப்பிட்டபோது யாரும் மாற்றத்தை உணரவில்லை.

உடல் செயல்பாடு

- மின்வழி உணர்வுத் தூண்டல் பெற்றவர்கள்ம 4 வாரம் கழித்து, அவர்களின் வலியை 0(வலி இல்லை)-10 (உச்சக்கட்ட வலி) என்ற ஒரு அளவுக்கோலில், 2 என்ற அளவில் முன்னேற்றமடைந்ததாக மதிப்பிட்டனர்

-போலி மின்வழி உணர்வுத் தூண்டல் பெற்றவர்கள் அல்லது வழக்கமான சிகிச்சை பெற்றவர்கள் 1 மாதம் கழித்து, அவர்களின் உடல் செயல்பாட்டில் 0(இயலாமை இல்லை)-10 (உச்சக்கட்ட இயலாமை) என்ற ஒரு அளவுக்கோலில், 1 என்ற அளவில் முன்னேற்றமடைந்ததாக மதிப்பிட்டனர்.

- மின்வழி உணர்வுத் தூண்டல் பயன்படுத்திவர்களுக்கு , போலி மின்வழி உணர்வுத் தூண்டல் இயந்திரம் பயன்படுத்தியவர்கள் அல்லது தங்களது வழக்கமான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டவர்களோடு ஒப்பிடும் போது அவர்களது முழங்கால் செயல்பாட்டில் 1 அலகு மேலும் முன்னேற்றம் இருந்தது.

இதனை வேறு விதமாக கூறலாம் :

- மின்வழி உணர்வுத் தூண்டல் பயன்படுத்திவர்களில் 100 பேரில் 29 பேர் சிகிச்சையினால் மாற்றத்தை உணர்ந்தனர்(29%).

போலி மின்வழி நரம்பு தூண்டுதல் இயந்திரம் கொண்டு சிகிச்சை அல்லது வழக்கமான சிகிச்சை பெற்ற 100 பேரில் 26 பேர் சிகிச்சைக்கு மாற்றத்தை உணர்ந்தனர் (26%).

- போலி மின்வழி உணர்வுத் தூண்டல் இயந்திரம் பயன்படுத்தப்படுயவர்கள் அல்லது தங்களது வழக்கமான சிகிச்சைகள் எடுத்துவர்களை ஒப்பிடுகையில் மின்வழி துண்டல் பயன்படுத்திய வர்களில் மூவர் கூடுதலாக(3% வேறுபாடு) பயன் அடைந்தனர்.

பக்க விளைவுகள் காரணமாக விலகியவர்கள்

மின்வழி உணர்வுத் தூண்டல் பெற்ற 100 பேரில் இருவர் பக்க விளைவுகள் காரணமாக ஆய்வுகளில் இருந்து விலகிக்கொண்டனர் (2 %).

போலி மின்வழி நரம்பு தூண்டுதல் இயந்திரம் கொண்டு சிகிச்சை அல்லது வழக்கமான சிகிச்சை பெற்ற 100 பேரில் 2 பேர் பக்க விளைவுகள் காரணமாக ஆய்வில் இருந்து விலகினர் (2%).

பக்கவிளைவுகள் காரணமாக விலகியவர்கள் எண்ணிக்கையில் வேறுபாடு எதுவும் இல்லை ( 0 வேறுபாடு )இது வாய்ப்பு விளைவாக இருக்கலாம். இந்த வாய்ப்பு விளைவாக இருக்க முடியும்.

பக்க விளைவுகள்

மின்வழி உணர்வுத் தூண்டல் பெற்ற 100 பேரில் 15 பேர் பக்க விளைவுகளை அனுப வித்தனர் (15%).

போலி மின்வழி நரம்பு தூண்டுதல் இயந்திரம் கொண்டு சிகிச்சை அல்லது வழக்கமான சிகிச்சை பெற்ற 100 பேரில் 15 பேர் பக்க விளைவுகள் அனுபவித்தனர் (15%).

பக்க விளைவுகளை அனுபவித்தவர்களின் எண்ணிக்கை வித்தியாசப் படவில்லை (வேறுபாடு 0 %). இது வாய்ப்பின் விளைவாக இருக்கலாம். இது வாய்ப்பின் விளைவாக இருக்கலாம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ. பி. என்.அர்.

Tools
Information