சாதாரண ஜலதோஷத்தைத் தடுக்க தடுப்பூசிகள்

விமர்சன் கேள்வி

தடுப்பூசிகள் சாதாரண ஜலதோஷத்தை தடுக்க உதவுமா என்று பார்த்தோம்

பின்னணி

ஜலதோஷம் மேல் சுவாசக்குழாய் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது மற்றும் மக்கள் வைரஸ் இறந்தவுடன் வழக்கமாக நல்ல நிலைக்கு வந்துவிடுகின்றனர். சாதாரண ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உடல் நிலை சரியில்லாதது போன்று உணருவது, தொடர்ந்து மூக்கு ஒழுகுவது, மூக்கடைப்பு,தும்மல்,மற்றும் தொண்டைப்புண் இல்லாமல் இருமல் அல்லது தொண்டைப் புண்ணுடன் இருமல்,உடலில் சற்று உயர்ந்த வெப்பநிலை ஆகிவற்றை உணருவர். நோயின் அறிகுறிகளை நீக்குவதே சிகிச்சைகளின் நோக்கமாய் இருகின்ன்றது.

உலகளவில் சாதாரண ஜலதோஷம் பரவலான நோயுற்ற தன்மைக்கு காரணமாகிறது. அதிக அளவிலான வைரஸ்கள் சம்மந்தப்பட்டிருப்பதால் சாதாரண ஜலதோஷத்திற்கு தடுப்பு மருந்து உற்பத்தி செய்வது மிக கடினமாக உள்ளது. ஆரோக்கியமான மனிதனிடத்தில் சாதாரண ஜலதோஷத்திற்கான தடுப்பு மருந்தின் விளைவுகள் இன்னும் என்னவென்று தெரியவில்லை.

தேடல் தேதி

இந்த மேம்படுத்தலுக்காக நாம் 2 செப்டம்பர் 2016 வரை ஆராய்ச்சி இலக்கியங்களை தேடினோம்.

ஆய்வு பண்புகள்

புதிய ஆய்வுகள் எதுவும் இதில் சேர்க்கப்படவில்லை என்பதை நாம் கண்டறிந்தோம்.இந்த திறனாய்வில் 1965 ல் ஒரு சீரற்றக் கட்டுப்படுத்தப்பட்ட சோதனை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் அமெரிக்க கடற்படையில் பயிற்சி பெரும் 2307 ஆரோக்கிய மக்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களிடம் பலவீனமான(வலுகுறைக்கப்பட்ட) அடினோவைரஸ் தடுப்பூசியுடன் போலி தடுப்பு மருந்து கொடுத்ததும் ஒப்பீடு செய்யப்பட்டது.

ஆய்வு நிதி மூலங்கள்

இந்த ஆய்விற்கான நிதி அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டது.

முக்கிய முடிவுகள்

தடுப்பூசி அளிக்கப்பட்டவருக்கும், போலி தடுப்பூசி கொடுக்கப்பட்டவருக்கும் இடையில் எந்த வித்தியாசங்களும் காணப்படவில்லை. தடுப்பூசியைச் சார்ந்த எந்த மோசமான விளைவுகளும் ஏற்படவில்லை. எனினும் குறைவான நபர்கள் காரணமாகவும் குறைவான ஜலதோஷ குறைபாடுகள் காரணமாகவும் ஆய்வின் நம்பிக்கைத் தன்மை குறைவாக உள்ளது. தடுப்பூசிகள் சாதாரண ஜலதோஷத்தை தடுக்குமா என எதிர்கால ஆய்வுகள் விவரிக்க முடியும். அடினோவைரஸ் தடுப்பூசி சாதாரண ஜலதோஷத்தை தடுக்க இயலவில்லை என இப்போதைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆதாரங்களின் தரம்

நாம் சான்றுகளின் தரத்தினை ஆய்வு செய்யும்போது தவறுகள் நிகழ அதிக வாய்ப்புகள்,குறைந்த அளவிலான மக்கள் மற்றும் ஜலதோஷம் பாதித்தவர்கள் குறைவிலான அளவிலேயே ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே முடிவுகள் துல்லியமற்று உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [சங்கீதா, ஜாபெஸ் பால்]

Tools
Information