மலேரியா காய்ச்சல் சிகிச்சைக்கு காய்ச்சலடக்கும் நடவடிக்கைகள்

காய்ச்சல் மலேரியாவின் பொதுவான அறிகுறியாகும். காய்ச்சலடக்கி மருந்துகள் (காய்ச்சல் நிவாரண மருந்துகள்) மற்றும் (வெகுவெதுப்புப் பஞ்சொற்று போன்ற) நடவடிக்கைகள் மலேரியா காய்ச்சலுக்கு பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பராமரிப்பாளர்கள் மற்றும் சுகாதார தொழிலாளர்களால் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள் காய்ச்சல் சிகிச்சைக்கு காய்ச்சலடக்கும் மருந்துகளின் நன்மை பற்றிய நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். அதனால் உண்மையில் மலேரியா ஒட்டுண்ணிகளை இரத்தத்தில் இருந்து அகற்ற எடுத்துக்கொள்ளும் காலம் நீடிக்கும் என்று அவர்கள் அறிவுறுத்தினார்கள். இந்த திறனாய்வு இந்த பிரச்சினைகள் பற்றி அறிய இதற்காக தகுந்த ஆராய்ச்சி முறையை பயன்படுத்திய ஆதாரங்களை தேடியது. நாங்கள் ஒரு சில சிறிய ஆய்வுகள் மட்டுமே கண்டறிந்தோம். அவற்றில் இருந்து மலேரியா நோய்த்தொற்று அறிகுறிகள் தீர்க்க காய்ச்சலடக்கி மருந்துகள் உதவுமா அல்லது பிணி நீடிக்குமா என்ற முடிவுக்கு வர போதுமான தகவல் கிட்டவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information