பக்கவாதத்திற்குப் பிறகான மீட்சியை மேம்படுத்துவதற்கான உளஊக்கி வகை (Amphetamines)

பக்கவாதம் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடைசெய்யும். அதன் காரணமாக மூளையின் சில செயல்பாடுகளை சேதப்படுத்தும். பக்கவாதம் பல்வேறு உடல் பாகங்களைச் செயலிழக்கச்செய்யும். அல்லது பிற உடல் செயல்பாடுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும். பக்கவாதத்தில் இருந்து மீட்டெழுதலுக்கு உளஊக்கி (தூண்டும் மருந்துகள்) பயன்தரலாம் என்று விலங்குகள் மீதான சோதனைகள் காட்டின. மிருகங்களில் பக்கவாதத்தில் இருந்து விரைவாக மீட்டெழ வைக்கும் வினைவழி எது என்று சரியாக அறிந்துகொள்ள முடியவில்லை. இந்த திறனாய்வு உளஊக்கி வகை (amphetamines)மருந்து எடுத்துக்கொண்ட பக்கவாத நோயாளிகள் தொடர்புடைய 10 சமவாய்ப்புச் சோதனைகளைக் கண்டறிந்தது. உளஊக்கிகள் கெடுதலை விட அதிக நன்மையே செய்தன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பக்கவாதத்தில் இருந்து மீட்டெழுதலுக்கு உளஊக்கி வகைகளை வழக்கமான சிகிச்சையாக பயன்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை. மேலும் சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர்

Tools
Information
Share/Save