கார்பன் மோனா-ஆக்ஸ்சைட் நச்சேற்றம் கொண்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக மிகை அழுத்த பிராணவாயுவை பயன்படுத்துவதை ஆதரிக்க பற்றாக்குறையான ஆதாரம் உள்ளது.

ஏதேனும் காரணத்தோடோ (எடுத்துக்காட்டிற்கு: தற்கொலை முயற்சிகளில்) அல்லது விபத்தினலோ அநேக மக்கள் கார்பன் மோனா-ஆக்ஸ்சைட்டால் நஞ்சடைவர். கார்பன் மோனா-ஆக்ஸ்சைட், உடலில் பிராண வாயுவின் போக்குவரத்தோடு இடைப்படும் மற்றும் மூளை உட்பட ஒரு பல்வேறுப்பட்ட அவயவங்களை நேரடியாக தாக்கக் கூடும். பாதிக்கப்பட்ட நபரை வாயுவின் ஆதாரத்திலிருந்து அகற்றுவது, பொதுவான ஆதரவு பராமரிப்பு மற்றும் உடலிலிருந்து கார்பன் மோனா-ஆக்ஸ்சைட் வெளியேற்றத்தை விரைவுப்படுத்தும் பிராண வாயுவை உட்செலுத்துதல் போன்றவை வழக்கமான சிகிச்சையில் உள்ளடங்கும். மிகை அழுத்த பிராணவாயு (ஹைபர்பாரிக் ஆக்சிஜன்) வெகு சில மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது, மற்றும் இந்த செயல்முறையை துரிதப்படுத்த சில நேரங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. எனினும், வெளியான சோதனைகளின் இந்த திறனாய்வு, நரம்பியல் காயங்களை தடுப்பதில் ஹைபர்பாரிக் ஆக்சிஜனின் பயன்பாடு பற்றி, முரணான, சார்பு அபாயத்தின் சாத்தியம் கொண்ட, மற்றும் பொதுவான பலவீனமான ஆதாரத்தை கண்டது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information