டைபாய்ட் காய்ச்சலை குறைப்பதில் Ty21a மற்றும் Vi பாலிசாக்ரைட் தடுப்பு மருந்துகள் திறன் மிக்கவையாக உள்ளன; புதிய தடுப்பு மருந்துகள் நம்பிக்கையளிக்கின்றன.

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

டைபாய்ட் காய்ச்சல் என்பது, தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளிலுள்ள குழந்தைகள் மற்றும் வளர் பருவத்தினரிடையே முக்கியமாக காணப்படும் ஒரு பாக்டீரியா தொற்றாகும். டைபாய்ட் காய்ச்சல் உணவு, பானம் அல்லது மாசுபட்ட குடிநீர் மூலம் பரவும். காய்ச்சல், வயிற்று பிரச்சனை அறிகுறிகள், தலைவலி, பசியின்மை, இருமல், பலவீனம், தொண்டைக் கட்டு, தலைச்சுற்றல் மற்றும் தசை வலிகள் போன்றவற்றை கொண்டிருக்கும். சிலசமயங்களில் இந்த தொற்று, உளநோய் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். 10% வரை இறப்பு ஏற்படக் கூடும், மற்றும் இது வேறுப்படும். பொதுவாக, சிகிச்சையானது தடுப்பு மருந்துகளை கொண்டிருக்கும். ஆனால், மருந்து எதிர்ப்பு பிரச்சனைகள் அறிக்கையிடப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் சுத்தமான உணவு இரண்டும் மிக முக்கியமான தடுப்பு முறைகளாகும். எனினும், இவை, டைபாய்ட் மிகவும் பாதித்துள்ள பகுதிகளில் மெதுவாக முன்னேறும் அவற்றின் சமூக-பொருளாதாரத்தோடு தொடர்புடையதாக உள்ளன. ஆதலால் இந்த நோயை தடுப்பதற்கான திறன் மிக்க வழி தடுப்பு மருந்தாகும். இந்த திறனாய்வு 18 சோதனைகளை (பயன்படுத்த தகுந்த தரவுடன் 17 ஆய்வுகள் ) கண்டது. ஆறு ஆய்வுகள் தடுப்பு மருந்தின் திறனை மட்டும் ஆராய்ந்தன; ஆறு ஆய்வுகள் தடுப்பு மருந்தின் திறன் மற்றும் பாதகமான நிகழ்வுகளையும்; மற்றும் ஆறு ஆய்வுகள் பாதகமான நிகழ்வுகளின்மேலான தரவை மட்டும் ஆராய்ந்தன. தற்போது, பயன்பாட்டிற்கு உரிமம் உள்ள இரண்டு முக்கிய தடுப்பு மருந்துகள் Ty21a மற்றும் Vi பாலிசாக்ரைட் ஆகியவை டைபாய்ட் காய்ச்சலை குறைப்பதில் திறன் மிக்கவையாக உள்ளன; குமட்டல், வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற பாதகமான விளைவுகள் மிகவும் அரிதாக இருந்தன. Vi-rEPA என்று அழைக்கப்படும் Vi இணைப்பு தடுப்பு மருந்து போன்ற புதிய,மாற்றியமைக்கப்பட்ட பிற தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன மற்றும் இவை நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. இந்த தொற்றின் அதிகரித்த அபாயத்தைக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுவதற்கு ஒரு தடுப்பு மருந்து இருந்தால் உதவியாக இருக்கும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்