இடைவிடு கஞ்சத்துவம் குறைப்பதற்கு உடற்பயிற்சி

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

இடைவிடு கஞ்சத்துவம் என்பது நடக்கும் போது உண்டாகும் ஒரு தசைப்பிடிப்பு கால் வலி ஆகும், இது ஓய்வின் போது இருக்காது. இது பெருந்தமனி தடிப்பு (தமனிகள் வழியாக செல்லும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் கொழுப்பு வைப்புகள்) காரணமாக கால் தசைகளுக்கு போதுமானஅளவு இரத்த ஓட்டம் இல்லாததால் ஏற்படுகிறது. லேசானது முதல் மிதமான கஞ்சத்துவம் உள்ள மக்கள் நடைபயிற்சியினைத் தொடரவும் , புகைப்பதை நிறுத்தவும் இதய நோய் ஆபத்து காரணிகளைகுறைக்கவும்அறிவுறுத்தப்படுகிறார்கள். குருதித்தட்டுக்கு எதிரான சிகிச்சை, பென்டோக்ஸிஃபிலைன் (pentoxifylline) அல்லது சைலோஸ்டாசால் (cilostazol), குருதிக்குழாய்ச் சீரமைப்பு (angioplasty) (தமனிக்குள் ஒரு பலூன் நுழைத்து அதை திறக்க செய்தல்) பைபாஸ் அறுவை சிகிச்சை போன்றவை பிற சிகிச்சைகளுள் அடங்கும்.

உடற்பயிற்சி, வழக்கமான பராமரிப்பு அல்லது மருந்துப்போலி, அல்லது மற்ற இடையீடுகளுக்காக சமவாய்ப்பின்படிதேர்வு செய்த நிலையான கால் வலியுள்ள 1816 வயது வந்தவர்களை ஆய்விற்கு உட்படுத்திய 30 கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை ஆய்வு ஆசிரியர்கள் அடையாளம் கண்டுள்ளனர். கால அளவில் இரண்டு வாரங்களில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரை விளைவு பலன் அளவிடப்படுகிறது. உடற்பயிற்சி வகைகள் தசை வலிமைக்கான பயிற்சி முதல் போல்ஸ்ட்ரைடிங் (polestriding) மற்றும் கை அல்லது காலிற்கான பயிற்சி வரை வேறுபட்டிருந்தன ; பொதுவாக கண்காணிப்போடு செய்யப்படும் சிகிச்சை குறைந்தபட்சம் வாரத்திற்கு இரண்டு முறை இருந்தது. முக்கியமாக தொடர்புடைய தகவல்கள் இல்லாத காரணத்தினால்,எடுத்துக்கொண்டுள்ளசோதனைகளின் தரம் மிதமாகவே இருந்தது. வழக்கமான பராமரிப்புடன் ஒப்பிடுகையில், உடற்பயிற்சி சிகிச்சை ஒரு ஓடுபொறி மீது அதிகபட்ச நடைபயிற்சியின் நேரத்தை கிட்டதட்ட ஐந்து நிமிடங்கள் மேம்படுத்தியிருக்கிறது (4.51; எல்லை 3.0 to 5.9 நிமிடங்கள்). வலியில்லாமல் நடக்கும் தூரத்தை ஒட்டுமொத்தமாக 82.29 மீட்டர்களும் (எல்லை 71.86- 92.72 மீட்டர்) பங்கேற்பாளர்களால் நடக்கஇயலும் அதிகபட்ச தூரத்தை 108.99 மீட்டர்களும்(எல்லை 38.20- 179.78 மீட்டர்) ஆறு சோதனைகளில் அதிகரிக்கப்பட்டுள்ளது மேம்பாடுகளை இரண்டு ஆண்டுகள் வரை இருந்தது. உடற்பயிற்சி கணுக்கால் முதல் மேற்கைவரையிலான இரத்த அழுத்த குறியீட்டை மேம்படுத்தவில்லை. மரணம் அல்லாத இருதய நிகழ்வுகளை பற்றி எந்த ஒரு தரவும் அளிக்கவில்லை. குறைந்த தரவு உள்ள காரணத்தினால் இறப்பு மற்றும் உறுப்பு நீக்கம் (amputation) தேவை குறித்த தரவு தீர்மனமற்றவையாகிறது.

சிறிய எண்களினாலான சோதனைகளும் மற்றும் பங்கேற்பாளர்களும் உள்ள காரணத்தினால்,உடற்பயிற்சியை குருதித்தட்டுக்கு சிகிச்சையுடன், பென்டோக்ஸிஃபிலைன், இல்லோப்ரோஸ்ட் (iloprost), வைட்டமின் ஈ மற்றும் வாயு கால் மற்றும் கெண்டைத்தசை வாயுவினால் இயங்குகிற அழுத்தச் சிகிச்சையுடன் உடற்பயிற்சியை ஒப்பீட்டு சான்றுகள் குறைவாக இருந்தது.

உடற்பயிற்சி திட்டங்களுக்கு பொருந்தும் மக்களுக்கு நடைபயிற்சி நேரமும், நடக்கும் தூரமும் உடற்பயிற்சி திட்டத்தால் தெளிவாக மேம்படுகிறது என்று தற்போதிய திறனாய்வு காட்டுகிறது. இந்த நன்மை இரண்டு ஆண்டுகளுக்கு நிடிக்கும் என்று தோன்றுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தீபா மோகன்பாபு மற்றும் சி.இ.பி.என்.அர் குழு