பெருமூளை மலேரியா சிகிச்சைக்காக ஊக்க மருந்து கார்டிகோஸ்டீராய்டு.

பெருமூளை மலேரியா மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது, காரணம் இது வலிப்பு மற்றும் கோமா நிலைக்கு தள்ளுகிறது, 15 முதல் 50 சதவிகித நோயளிகள் கோமா நிலையில் கூட தள்ளப்பட்டு இறக்குகின்ற நிலை கூட ஏற்படுகிறது, 5 முதல் 10 சதவிகிதத்தினர் மூளையில் பாதிப்பு அடைந்து அதனால் ஊனமுற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இது வரைக்கும், நோயாளிகளுக்கு மூளையின் வீக்கத்தை குறைப்பதற்க்காக சுகாதார பணியாளர்கள் ஊக்க மருந்தாக dexamethasone மற்றும் hydrocortisone, இன்னும் கூடுதலாக மலேரியா எதிர்ப்பு சிகிச்சையையும் பெருமூளை மலேரியா நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த ஆய்வில் பெருமூளை மலேரியா நோயாளிகளுக்கு ஊக்க மருந்து கொடுத்ததன் விளைவுகள், சாவு, உயிர் வாழ்வதற்கு அச்சுறுத்தும் வகையான பக்க விளைவுகள், மற்றும் உயிர் பிழைத்தவர்களின் மிச்ச வாழ்க்கையின் இயலாமை ஆகியவை ஆராயப்பட்டது.

ஆய்வாளர்கள் இரண்டு சோதனைகளிலிருந்து 143 நோயாளிகளின் (பெரியவர்கள் மற்றும் குழந்தைகள்) முடிவுகளை ஆராய்ந்தனர். ஊக்க மருந்து குழுவிற்கும் மற்றும் கட்டுபாட்டு குழுவிற்கும் சாவு எண்ணிகையில் எந்த வித்தியாசமும் கண்டறியப்பட முடியவில்லை மற்றும் சிகிச்சையின் சிக்கல்கள் குறித்ததான ஆதாரக் கூறுகளை கணிப்பதற்கு சிக்கலாக உள்ளது. கூடுதலாக இந்த ஆய்வில் வாழ்வின் இயலாமையை குறித்த தகவல்களை குறிப்பிடவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

தெற்காசிய காக்ரேன் குழு [ஜாபெஸ் பால்]

Tools
Information