செலெஜிலினின் ஆற்றல் வாய்ந்த நரம்பியல்பாதுகாப்பு குணங்கள் மற்றும் பார்க்கின்சன் நோய்க்கான சிகிச்சையில் அதன் பங்கு முதலிய அதன் ஆரம்பகட்ட நம்பிக்கையளிக்கும் போக்குகள் இருந்த போதிலும் அல்சைமர் நோய்க்கு செலெஜிலின் பயன்பாடு ஏமாற்றத்தைத் தந்தது. குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கும் எந்த நிகழ்வுக்கும் ஆதாரம் இல்லை என்பதோடு அல்சைமர் நோய் உள்ளவர்களுக்கு அது மருத்துவரீதியில் அர்த்தமுள்ள நன்மை பயக்கும் என்பதற்கும் எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஆகவே அதனை அல்சைமர் நோய்க்கு பயன்படுத்துவதற்கு அல்லது அல்சைமர் நோயில் அதன் செயல்திறன் பற்றிய மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கு எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
மொழிபெயர்ப்பு குறிப்புகள்:
மொழிபெயர்ப்பு: தனஞ்செயன் சஞ்சயன் மற்றும் சி.இ.பி.ஏன்.அர்