செவிலியர்கள், தாதிகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் (dietiticians), போன்ற மருத்துவம் சார்ந்த தொழில் நெறிஞர்கள், நோயாளிகளின் பேணுகையை மேம்படுத்த, பிணி சார்ந்த வழியுரைகளை திறன்பட இணைத்துக்கொள்ள முடியும்.

செவிலியர்கள், தாதிகள், நல உணவு வல்லுநர் மற்றும் இதர மருத்துவம் சார்ந்த உடல்நல பராமரிப்பு நிபுணர்களுக்கு பிணி சார்ந்த வழியுரை வெளியிடுவதன் மூலம் நடைமுறையில் உள்ள வேறுபாடுகளைக் குறைப்பதோடு நோயாளிகள் பேணுகையும் மேம்படும். குறைந்த அளவு ஆராய்ச்சிகளே இருந்தபோதும் வழியுரை, பேணுகையை மேம்படுத்தும் என்றும் தொழில்முறை பணிகள் திறம்பட மாற்றீடு செய்யப்பட முடியும் என்பதற்கும், எடுத்துக்காட்டாக சில சூழ்நிலைகளில் ஒரு மருத்துவர் பணியை ஒரு செவிலியர் செய்ய முடியும் என்பதற்கும் சில ஆதாரங்கள் வுள்ளதாக இந்த திறனாய்வு கண்டறிந்தது. அத்தகைய தலையீடுகளது விருப்பறிவிப்புகளால் செலவுகள் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது ஆனால் இந்த தலைப்பின் அனைத்து பகுதிகளிலும் மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information