முறிந்த மணிக்கட்டுக்கு அறுவை சிகிச்சை அல்லாத எந்த சிகிச்சை சிறந்தது என்று கூற போதுமான ஆதாரங்கள் இல்லை.

வயதான பெண்களில், ஒரு உடைந்த மணிக்கட்டானது (இரண்டு முழங்கை எலும்புகளில் ஒன்றின் கீழ் இறுதியில் ஒரு எலும்பு முறிவு கொண்ட) கையை நீட்டிய படி வீழ்வதால் விளையலாம். வழக்கமாக இதற்கான சிகிச்சை, அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சையாகும் .இது எலும்புத் துண்டுகளை மீண்டும் அதே இடத்தில் வைப்பதையும், மற்றும் மோசமாக இடம்பெயர்ந்தது என்றால் மணிக்கட்டை ஒரு சுண்ணச்சாந்து கட்டில் முடக்குதலையும் உள்ளடக்கும். மிதமான இடம்பெயர்ந்த முறிவுகளை சரியான நிலைக்கு பொருத்தும் முறை என்ன? மற்றும் அதனை எப்பொழுது செய்வது என்பதனை பற்றிய ஆதாரங்கள் இல்லை. மேலும், சிறந்த முறை எது? எவ்வளவு காலம் முடக்கி (immobilisation) வைக்க வேண்டும் என்று தீர்மானிக்க போதுமான ஆதாரம் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.ப.ஏன்.அர். குழு

Tools
Information