கர்ப்ப காலத்தில், யோனி பூஞ்சைத் தொற்று நோய்க்கு (vaginal candidiasis (thrush)) மேற்பூச்சு சிகிச்சை

கர்ப்பிணிப் பெண்களுக்கு Imidazoles சிறந்த மருந்து, ஆனால் அதிக நாட்கள் சிகிச்சை தேவைப்படும் (4 அல்லாமல் 7 நாட்கள்). வெண்புண் (thrush) கர்ப்ப காலத்தில் ஒரு பொதுவான யோனி தொற்று. அவை அரிப்பு மற்றும் எரிச்சல் உண்டுபண்ணும். ஈஸ்ட் தொற்று குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. பூசண எதிர்ப்பி (antifungal) களிம்புகள் செயல்திறமிக்கவை. நிஸ்ட்டடின் (nystatin), ஹைட்ரகாபின் (hydrargaphen) போன்ற பழைய சிகிச்சைகளை விட imidazoles (clotrimazole போன்றவை)அதிக செயல்திறன்மிக்கவை. அதிக நாட்கள் (7 நாட்கள்) சிகிச்சை 90% பெண்களை குணப்படுத்தும் அதே சமயம் வழக்கமான (4 நாட்கள்) சிகிச்சை அதில் பாதி நோயாளிகளை மட்டுமே குணப்படுத்தும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information