மக்கள் புகை பிடித்தால் அவர்களை விசாரிப்பதற்கு, மற்றும் அவர்கள் புகை பிடிப்பதை விடுவதற்கு உதவ ஆலோசனை அளிப்பதற்கு ஆரோக்கிய தொழில் முறை வல்லுநர்களுக்கு ஊக்கமளிக்க பயிற்சி திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆரோக்கிய தொழில் முறை வல்லுநர்கள் புகை பிடிப்பவர்களை அடையாளம் காணவும் மற்றும் புகை பிடிப்பதை விடும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த பயிற்சி திட்டங்கள் உதவுகின்றன என்று 17 சோதனைகளின் இந்த திறனாய்வு கண்டது. இந்த திட்டங்கள், ஆரோக்கிய தொழில் முறை வல்லுநர்களால் புகை பிடிப்பதை விடுவதற்கு ஆலோசனை மற்றும் ஆதரவு அளித்த மக்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தன.
மொழிபெயர்ப்பு குறிப்புகள்:
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.