இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு குருதி உறைவுச் சிதைப்பி மருத்துகள்

கேள்வி

குறுகிய கால இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம், இரத்த உறைவுச் சிதைப்பி (Thrombolytic) சிகிச்சையின் பலாபலன் மற்றும் அபாயமின்மையை மருந்தற்ற சிகிச்சை மற்றும் சிகிச்சையின்மை ஆகியவற்றோடு ஒப்பிட்டு, உறைவுமுறிவு சிகிச்சை பக்கவாதத்திற்கு பின்னர் விளைவு பலன்களை மேம்பாடடைய செய்கிறதா என்று கண்டறிய விரும்பினோம்.

பின்புலம்

பெரும்பாலான பக்கவாதம் மூளையில் உள்ள ஏதேனும் தமனியில் குருதி உறைவதால் ஏற்படுகிறது. சரியான நேரத்தில் இரத்த உறைவுச் சிதைப்பி (thrombolytic) மருந்தினைக் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சையால் பெரிய அளவு மூளை ஊறுபாடு ஏற்படும் முன்னர் இரத்த ஓட்டத்தை மீளிருப்புச் செய்யவும், பக்கவாதத்திற்குப் பின்னர் நன்றாக நலனடையவும் உதவுகிறது. எனினும் உறைவுமுறிவு மருந்துகள் காரணமாக மூளையில் தீவிரமான ரத்தபோக்கினால் மரணம் சம்பவிக்க கூடும். குறுகிய கால இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு உறைவுமுறிவு சிகிச்சையின் மதிப்பீடு குறித்து பல சமவாய்ப்பிட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உறைவுமுறிவு (thromboltic) மருந்தின் அல்டிப்லேசை (alteplase), கனடா மற்றும் அமெரிக்காவில் பக்கவாதம் ஏற்பட்ட மூன்று மணி நேரத்திற்குள்ளும், பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளில் 4.5 மணி நேரத்திற்குள்ளும் வழங்க உரிமமளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையினை மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை வெற்றிகரமாக அதிகரித்துவருகிறது.

ஆய்வு பண்புகள்

நவம்பர் 2013 வரைகூடிய 10,187 பங்க்கேற்பளர்கள் கொண்ட 27 ஆய்வுகளை நாங்கள் உள்ளடக்கினோம். பெரும்பாலான தரவுகள் குறுகிய கால இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு மரபிழைச் சீரமைப்பு திசு ப்லாஸ்மிநோஜன் செயல் ஊக்கி (rt-PA) என்ற மருந்தை ஆறு மணி நேரம் வரை உள்-சிரை வழியாக பயன்படுத்திய ஆய்வுகளில் இருந்து பெறப்பட்டது. மேலும் பல்வேறு வகையான மருந்துகள், பக்கவாதம் ஏற்பட்ட பல்வேறு கால நேரத்துக்குள் சோதிக்கப்பட்டன; இந்த வகையான சில ஆய்வுகள் கரத்தில் உள்ள சிரை வழியாக அல்லாமல் மூளையில் உள்ள தமனி வழியாக செலுத்தப்பட்டன. எல்லா ஆய்வுகளும் உறைவுமுறிவு சிகிச்சையை மருந்தில்லா சிகிச்சை மேற்கொண்ட ஒரு குழுவுடன் ஒப்பீடு செய்தது. பெரும்பாலான ஆய்வுகள் மிதமான முதல் கடுமையான பக்கவாதத்தினால் பாதித்தவர்களை உள்ளடக்கியது. எல்லா ஆய்வுகளும் பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவ மனையில் மேற்கொள்ளப்பட்டன. எல்லா ஆய்வுகளும் எல்லா விளைவு பலன்களுக்கான தகவல்களை பங்களிப்பு செய்ய வில்லை என்பதே இந்த ஆய்வுகளில் உள்ள வேறுபாடு ஆகும். எனினும் நாங்கள் எல்லா தரவுகளையும் உபயோகப்படுத்தினோம். பெரும்பாலான ஆய்வுகள் கணிப்பான் வழி உடலுறுப்பு ஊடுகதிர்ப்படம்(சில ஆய்வுகள் காந்த அதிர்வு அலை வரைவினை உபயோகப்படுத்தியும்) மூலம் அறிகுறிகளுக்கு காரணம் ரத்த கசிவு அல்ல என்று உறுதி செய்த பின்னர் ஆய்வில் உள்ளடக்கப்பட்டன.

முக்கிய முடிவுகள்

முந்தைய ஆய்வுகள் போன்று சமீபத்திய ஆய்வினை (IST-3) உள்ளடக்கிய இந்த புதுப்பித்தலில் எல்லா முக்கிய விளைபயன்களுக்கு இடையே ஒரு பொதுவான உடன்பாடு காணப்படுகிறது; இந்த உடன்பாடு rt-PAவை சோதனை செய்த 12 ஆய்வுகளுக்கு இடையேயும் மற்ற உறைவு கரைத்தல் மருந்துகளை பரிசோதித்த 15 ஆய்வுகளுக்கு இடையேயும் காணப்படுகிறது. IST-3 மற்றும் முந்தைய ஆய்வுகளுக்கு இடையே என்ன வேறுபாடு என்றால், IST-3 ஆய்வில் 80 வயதினை கடந்தவர்கள் அதிகம் ஆவர். உறைவு கரைத்தல் சிகிச்சை அளிப்பதனால் தலைக்குள் ஏற்படக் கூடிய இரத்த ஒழுக்கின் இடர்வரவு மற்றும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய முன்கூட்டியே நிகழும் மரணத்தின் இடர்பாடு அதிகமே ஆயினும், தினசரி செயல்பாடிற்காக மற்றவர்களிடம் நீண்ட காலம் சார்ந்து இருக்கும் இடர்பாடினை குறைக்கிறது. ஆரம்ப காலத்தில் ஏற்படக்கூடிய ரத்த ஒழுக்கின் இடர்பாடு கடக்குமேயாயின், மூன்று முதல் ஆறு மாதங்களில் உறைவு கரைத்தல் மருந்துகளை கொண்டு சிகிச்சை மேற்கொண்டவர்கள் பக்கவாத்ததில் இருந்து குணமடையவும் மற்றும் சார்பில்லாமல் வாழ்வதற்கான சாத்தியங்களும் அதிகம்; குறிப்பாக இந்த சிகிச்சை பக்கவாதம் ஆரம்பித்த மூன்று மணி நேரத்திற்குள் கொடுக்கப்படுமேயாயின். வயது அதிகம் உள்ளவர்கள் வயது குறைந்தவர்களைப் போன்று சமமாக பயனடைந்தனர். உறைவுமுறிவு மருந்தினோடு அஸ்பிரினை சேர்ப்பதனால் ரத்த ஒழுக்கு ஏற்படுவதற்கான இடர்பாடு அதிகம்; எனவே இது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் தொகுப்பு தரவுகள் அல்லாமல் சிகிச்சைக்கு முன்பு ஊடு கதிர்ப்படம் மூலம் நோயாளர்களின் மூளையில் கண்டறி யப்பட்டவை, வேறுவேறுவகையில் சிகிச்சை அளிப்பது போன்ற தனிப்பட்ட தரவு காரணிகளை பகுப்பாய்வு செய்து பார்த்தால் மேலும் தகவல்கள் வெளிவரும். தாம் பக்கவாதம் அனுபவிப்பதாக எண்ணுகின்ற மக்கள் உடனே மருத்துவமனைக்கு சென்று, பக்கவாத மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டு, மூளையின் ஊடு கதிர்ப்படம் எடுக்கப்பட்டு மேலும் முடிந்தவரை வேகமாக உறைவு-கரை த்தல் சிகிச்சை பெறவேண்டும். அவர்கள் சிகிச்சைக்கு தாங்கள் மிகவும் வயதானவர்கள் என்று எண்ணக்கூடாது. பக்கவாதம் ஏற்பட்ட மூன்று மணி நேரத்துக்குள் வழங்கப்படும் சிகிச்சை மிகவும் பயனுடையது ஆகும்; 4.5 மணி நேரத்திற்கு பின்னர் அளிக்கப்படும் சிகிச்சை விளைபயன்களை அதிகப்படுத்துகிறது. அதற்குப் பின்னர் வழங்கப்படும் சிகிச்சையின் செயற்பாடு பற்றி தெளிவாக தெரியாததினால் ஆய்வுகள் இதனை பரிசோதித்து வருகின்றன. மெலிதான பக்கவாத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் உறைவு கரைத்தல் சிகிச்சையினால் ரத்தபோக்கு ஏற்படும் ஆபத்தினை காட்டிலும் அதனின் பலன் அதிகமா என்று கண்டறிய ஆய்வில் இருந்து தகவல்கள் தேவைப்படுகிறது.

சான்றின் தரம்

இந்த சான்றுகள் பக்கவாத வல்லுனர்களால் மேற்கொள்ளப்பட்ட சமவாய்ப்பிட்டு சோதனைகள் மூலம் பெறப்பட்டவை. சில ஆய்வுகள் (8/27) உறைவு கரைக்கும் மருந்தினை தயாரிக்கும் குழுமத்தை சார்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டது; ஆனாலும் பெரும்பாலான பங்கேற்பாளர்கள் பங்கேற்ற 19/27 ஆய்வுகள் மருந்து குழுமத்தை தவிர்த்து அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவங்களால் நிதி உதவி பெறப்பட்டவை. இந்த ஆய்வின் முடிவுகள் அகண்ட இடைவெளி கொண்ட வெவ்வேறு தீவிரமான பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வேறுவகையான மருத்துவ காரணங்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: கோ.ஷங்கர் கணேஷ் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information