கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏரோபிக் உடற்பயிற்சி

கர்ப்ப காலத்தில் ஏரோபிக் உடற்பயிற்சி உடற்கூறு வலிமையை மேம்படுத்துவதாக தோன்றுகிறது. ஆனால் தாய் அல்லது குழந்தைக்கு அதனால் ஏற்படும் முக்கியமான ஆபத்துகள் அல்லது நன்மைகள் குறித்து உய்த்துணர போதுமான ஆதாரங்கள் இல்லை.

ஏரோபிக் உடற்பயிற்சி ஒரு நபரின் சுவாசம் மற்றும் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. 1014 கர்ப்பிணி பெண்கள் சம்பந்தப்பட்ட 14 சோதனைகளைக் கொண்ட திறனாய்வில், குறைந்தது வாரம் இரண்டு முதல் மூன்று முறை தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் கர்ப்பிணி பெண்களுக்கு உடற்கூறு வலிமை மேம்படுகிறது என்று கண்டறியப்பட்டது, மற்றும் இந்த பெண்களுக்கும் வழக்கமான நடவடிக்கைகளில் இருப்போருக்கும் ஒரே கர்ப்ப காலம் உள்ளது என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன. ஆய்வுகளில் இருந்து பெண் மற்றும் அவரது குழந்தைக்கு இதர விளைவுகள் உள்ளன என்று காட்ட சிறு ஆதாரங்களே உள்ளது. சோதனைகளின் பரிசீலனையில் நீச்சல், நிலையான சைக்கிள் ஓட்டுதல் மற்றும் தரையில் பொதுவான உடற்பயிற்சி திட்டங்கள் போன்ற தொடு-அல்லாத உடற்பயிற்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன . சோதனைகளில் பெரும்பாலனவை சிறு மற்றும் குறைந்த செயல் முறை தரத்தில் இருந்தன, மற்றும் கர்ப்ப கால ஏரோபிக் உடற்பயிற்சி குறித்த நன்மைகள் மற்றும் அபாயங்கள் பற்றிய நம்புதர்க்குரிய பரிந்துரைகள் அளிப்பதற்கு பெரிய, தரமான சோதனைகள் தேவைப்படுகின்றன .

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:இ. நவீன் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information