சந்தேகிக்கப்பட்ட சிசு வளர்ச்சி குறைப்பாட்டிற்கு ஹார்மோன்கள் சிகிச்சை

கர்ப்பிணி பெண்கள் கூடுதலாக ஈஸ்ட்ரோஜென் எடுத்துக் கொண்டால் பிறக்காத குழந்தையின் வளர்ச்சி மேம்படும் என்பதை காட்ட ஆதாரம் இல்லை.

வயிற்றில் வளரும் சிசுக்கள் எதிர்பார்த்ததை விட மெதுவாக வளர்வது (சிசு வளர்ச்சி குறைப்பாடு) என்பதற்கு அது தாயின் இரத்தத்திலிருந்து மிக குறைவான சத்து பொருள்களேயே பெறுகிறது என எண்ணப்படலாம். ஹார்மோன்கள் என்பது நமது வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் (நமது உடல் எவ்வாறு உணவை பயன்படுத்துகிறது) மற்றும் இனவிருத்தி போன்ற பயன்களுக்கு நமது உடலில் உள்ள சுரப்பிகளால் தயாரிக்கப்படும் வேதிப்பொருள்களாகும். ஈஸ்ட்ரோஜென் (பெண் ஹார்மோன்) என்பது கர்ப்பிணி பெண்களிலிருந்து அவர்களின் குழந்தைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து அதின் மூலம் சத்து பொருள்களை கூடுதலாக வழங்க செய்வதாகும். கர்ப்பிணி பெண்கள் கூடுதலாக ஈஸ்ட்ரோஜென் எடுத்துக் கொள்ளும் போது, குழந்தையின் வளர்ச்சி மேம்படும் என்பதை காட்ட எந்த ஆதாரமும் இல்லை என சோதனைகளின் இந்த திறனாய்வு கண்டது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்கள் குழந்தைகளில் ஈஸ்ட்ரோஜென் உபச்சத்தின் விளைவு பற்றி சோதனைகளிலிருந்து எந்த ஆதாரமும் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information