உளவியல் காரணிகள், குழந்தைகளில் ஆஸ்துமாவில் அல்லது அதின் தீவிரத்தில் ஒரு விளைவைக் கொண்டிருக்க கூடும். பிரச்னைகளைக் கொண்டிருக்கும் குடும்பங்களுடன் உள்ள சில குழந்தைகள், கடுமையான ஆஸ்துமாவைக் கொண்டிருப்பதால், குடும்ப சிகிச்சை முயற்சி செய்யப்பட்டது. ஒரு குடும்பத்தில் இருக்கக் கூடிய ஏதாவது பிரச்னைகளை, ஒரு வேளை, அவை குழந்தைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி மற்றும் பின்னர் ஆஸ்துமாவை மோசமாக்குவது போன்றவற்றை தீர்ப்பதே நோக்கமாகும். குடும்ப சிகிச்சை (வழக்கமான ஆஸ்துமா சிகிச்சைகளுடன் கூடுதலாக), ஒரு குழந்தையின் ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைக்க உதவக் கூடும் என்று இரண்டு சோதனைகளிலிருந்து சில ஆதாரத்தை இந்த திறனாய்வு கண்டது, ஆனால், இதை உறுதிப்படுத்துவதற்கு அதிகப்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.