கரோடிட் இரத்த குழாய் ஒட்டுத் துண்டு சீரமைப்பிற்கான வெல்வேறு வித ஒட்டுத் துண்டுகள்.

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

கரோடிட் இரத்த குழாய் (மூளைக்கு இரத்தமளிக்கும் ஒரு முக்கிய இரத்தக் குழாய்) குறுகி போவதாலேயே 20% பக்கவாதங்கள் ஏற்படுகின்றன. கரோடிட் உட்தமனியெடுப்பு என்பது கரோடிட் இரத்தக் குழாயை திறந்து அதன் குறுகலை அகற்றுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் ஒரு அறுவைச் சிகிச்சை முறையாகும். எனினும், இந்த சிகிச்சையின் போதே, 5 முதல் 10% பக்கவாதம் ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது. அறுவைச் சிகிச்சை முடிந்து இரத்த குழாயை மூடும் போது, அதின் இடைவெளி நடுவே ஒரு ஒட்டுத் துண்டை புகுத்துவது பக்கவாதங்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. செயற்கை பொருளாலோ அல்லது நோயாளியின் சொந்த நரம்பைக் கொண்டோ ஒட்டுத் துண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு வகையான ஒட்டுத் துண்டு பிற வகையான மற்றொன்றை விட சிறந்ததா என்பதை மதிப்பிட இந்த திறனாய்வு நோக்கம் கொண்டிருந்தது. எனினும், திறனாய்வு செய்யப்பட்ட 13 ஆய்வுகளும் எந்த வகையான ஒட்டுத் துண்டு சிறந்ததாக இருக்கும் என்பதற்கு தெளிவான ஆதராத்தை அளிக்கவில்லை. நரம்பு ஒட்டுத் துண்டுகள் பிய்ந்து போய் உயிருக்கே ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.செயற்கை பொருள்கள் தொற்றுகளால் பாதிப்படைவதற்கு ஏதுவாகும். மேற்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்