இரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள், உயர் இரத்த அழுத்தம் உள்ள முதியவர்களுக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை குறைக்கும்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்) முதியவர்கள் மத்தியில் பொதுவாக காணப்படுகிறது, மேலும் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் உடைய 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தை குறைக்கும் சிகிச்சைகளை பற்றிய அனைத்து சோதனைகளின் ஒரு மதிப்பீடு மரணம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றை அச்சிகிச்சைகள் குறைக்கிறது என்று காட்டியது. மேல் மற்றும் கீழ் எண் இரண்டும் உயரும்போதும் அல்லது மேல் எண் மட்டும் உயரும்போதும் நன்மை ஒரே மாதிரியாகவே இருந்தது. 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களிடம் சிகிச்சை மரணத்தை குறைக்கவில்லை ஆனால் பக்கவாதம் ஏற்படுவதை குறைக்கிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: கா. அழகுமூர்த்தி மற்றும் சி.இ.ப.ஏன்.அர். குழு