காக்ரேன் உறுப்பினர் வரம்புகள்

யார் காக்ரேன் உறுப்பினராக இருக்க முடியும்?

காக்ரேன் உறுப்பினர் திட்டம் 2017 ல் துவக்கப்பட்டது. ஏற்கனவே காக்ரேனிற்கு பங்களிப்பு அளித்தவர்கள் இம்முறை உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டது.

காக்ரேனின் பணிகளில் விருப்பமுள்ள எவரேனும் இப்பொழுது காக்ரேனில் இணைந்து கொள்ளலாம். உங்கள் பயணம் ஒரு ஆதரவாளராக காக்ரேன் கணக்குடன் துவங்குகிறது. காக்ரேனிற்கு நீங்கள் அளிக்கும் பங்களிப்பு மூலம் ஆதரவாளர் நிலையிலிருந்து உறுப்பினர் நிலைக்கு தேர்ச்சி பெறலாம்.

ஒருவரின் பணி காலம் வரைக்கும் காக்ரேனின் பணியை செய்கிறவர் உறுப்பினர் நிலைக்கு தகுதி உள்ளவராய் இருக்கிறார். எந்தந்த நிலைகள் காக்ரேன் உறுப்பினர் தகுதியை அளிக்கும் என்பதை காண்க

ஒவ்வொரு உறுப்பினரும் எங்களுடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியவராய் இருக்க வேண்டும். கருத்து வேற்றுமையின் காரணத்தினால் நீங்கள் மருந்து தயாரிக்கும் நிறுவனத்திலோ அல்லது மருத்துவ இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்திலோ வேலை செய்யவில்லை என்பதை உறுதியளிக்க வேண்டும்.

நான் எப்படி காக்ரேன் உறுப்பினராகிறேன்?

உறுப்பினர் தகுதி காக்ரேன் பணிகளை தொடர்ச்சியாகவும் மற்றும் கணிசமான வழியிலும் செய்வதன் மூலம் அடைவதாகும். எந்த வேலைகள் காக்ரேன் உறுப்பினர் தகுதியை அளிக்கும் என்பதை காண்க

நீங்கள் காக்ரேனிற்கு பங்களிப்பு செய்ய நீங்கள் உறுப்பினர் மதிப்பீடுகளை சம்பாதிப்பீர்கள். 1000 புள்ளிகளுக்கு மேல் 12 மாதத்தில் சம்பாதித்தால் ஒருவருட உறுப்பினர் தகுதியை அடைவீர்கள். தானாகவே உங்களுக்கு உறுப்பினர் தகுதி வழங்கப்படும் - உங்கள் உறுப்பினர் தகுதியை துவக்க மின்னஞ்சலை எதிர்பாருங்கள். துவக்கும் மின்னஞ்சலை பெற உங்கள் மதிப்பீடுகளை அடைய குறைந்தபட்சம் 10 வேலை நாட்கள் ஆகும்.

நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் பங்களிப்பை செய்துக்கொண்டிருக்க உங்கள் உறுப்பினர் தகுதி தானாக புதுப்பிக்கப்படும்.

ஆதரவாளர்கள் உறுப்பினர் தகுதி அடைய பலவிதமான பணிகளை சேர்த்து பணியாற்றலாம். உதாரணமாக, மூன்று வலைத்தளப்பதிவுகளை 12 மாதத்திற்குள் முடித்தால் நீங்கள் 1,100 மதிப்பீடுகள் பெற்று ஒருவருட உறுப்பினர் தகுதியை அடைவீர்கள். நீங்கள் ஒரு திறனாய்வை வெளியிட்டால் நீங்கள் 5,000 மதிப்பீடுகளை பெற்று 5 வருட உறுப்பினர் தகுதியை அடைவீர்கள்.

எந்த வேலைகள் காக்ரேன் உறுப்பினர் தகுதியை அளிக்கும் என்பதை காண்க

கீழே விவரிக்கப்பட்டுள்ள பட்டியல் உதாரணத்திற்காக எந்தவிதமான பங்களிப்புகள் உறுப்பினர் தகுதிக்கு மதிப்பு கூட்டலை வழங்குகிறது என்று விவரிக்கிறது. பங்களிப்பின் முறைகள் மற்றும் உறுப்பினர் மதிப்பீடுகளை பார்க்க

பணிஒரு பணியின் மதிப்பீடு
ஒரு காக்ரேனின் நெறிமுறையை வெளியிட்டால் 3000
ஒரு காக்ரேன் திறனாய்வை வெளியிட்டால் அல்லது மேம்படுத்தினால்5000
காக்ரேன் திறனாய்வை அல்லது நெறிமுறைகளை விமர்சனம் செய்தல்500
காக்ரேன் திறனாய்வை அல்லது நெறிமுறைகளை ஒரு நுகர்வோர் விமர்சனம் செய்தல்500
காக்ரேன் கூட்டங்களில் பங்கேற்றால்500
காக்ரேன் Crowd ல் தகவலை சரி பார்த்தல்ஒரு நகலை சரி பார்த்தால் ஒரு மதிப்பீடு
மாணவர் உள் பயிற்சி1000
பணி பரிமாற்றம் உதாரணமாக தகவல் பிரித்தெடுத்தல்200
பயிற்சி மற்றும் கூட்டங்களை நடத்தினால் 500
Memsource ல் மொழிப்பெயர்த்தால்2 வார்த்தைகளை மொழிப்பெயத்தால் ஒரு மதிப்பீடு

நாங்கள் கூடுமானவரைக்கும் பலவிதமான பங்களிப்பு முறைகளை சேர்த்துள்ளோம், ஆனாலும் எங்களின் ஆதரவாளர்களின் பங்களிப்புகள் அதிகமாகவும் வித்தியாசமானதாகவும் இருப்பதால் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் ஒருசில முறைகளை இழந்திருக்கக்கூடும்.

நீங்களோ அல்லது உங்களுடன் பணியாற்றும் வேறு ஒருவரோ காக்ரேனிற்கு கணிசமான பங்களிப்பபை அளித்திருந்தும் பலன் அடையாமல் இருக்கும் பட்சத்தில் தயவுக்கூர்ந்து எங்களுக்கு membership@cochrane.org மூலம் தெரியப்படுத்தவும்.

எந்த நிலைகள் காக்ரேன் உறுப்பினர் தகுதியை அளிக்கும் என்பதை காண்க

காக்ரேனில் ஒருசில நிலைகளில் பணியாற்றுகிறவர்களுக்கு பணி செய்யும் காலம் வரை தானாக உறுப்பினர் தகுதி பெறுகின்றனர். அந்த தகுதிகள்:

 • சபை மற்றும் கவுன்சில் உறுப்பினர்கள்
 • காக்ரேன் குழுக்கள் மற்றும் இணையங்களின் ஊழியர்கள்
 • காக்ரேன் குழுக்களின் தலைமை ஆசிரியர்கள்
 • மொழிப்பெயர்ப்பு திட்ட மேலாளர்கள்
 • நிர்வாக குழு உறுப்பினர்கள்
 • செயல்முறை குழு ஒருங்கிணைப்பாளர்கள்
 • அறிவியல் குழுவின் உறுப்பினர்கள், கைப்புத்தகம் தலையங்க குழுக்கள், நிதி நடுவர் குழு
 • மத்திய நிர்வாக குழு உறுப்பினர்கள்

நீங்கள் காக்ரேனிற்கு பணி செய்து இன்னும் உறுப்பினராக இல்லை என்றால் membership@cochrane.org தொடர்பு கொள்ளவும்.

எதுவரைக்கும் என் உறுப்பினர் தகுதி நீடிக்கும்?

உறுப்பினர் உரிமை காலவரையறைக்கப்பட்டது. நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் பங்களிப்பை செய்துக்கொண்டிருக்க உங்கள் உறுப்பினர் தகுதி தானாக புதுப்பிக்கப்படும்.

உறுப்பினர் தகுதி மூன்று வழிமுறைகளால் பிரிக்கப்பட்டுள்ளது:

 1. பணி சார்ந்த நடவடிக்கைகளுக்காக ஒருவருட உறுப்பினர் தகுதி
 2. வெளியீடுகளை செய்யும் ஆசிரியர்களுக்கு 3 வருட அல்லது 5 வருட உறுப்பினர் தகுதி
 3. ஒருவர் சில பணி நிலைகளை கொண்டதால் அவருக்கு நிலைகள் சார்ந்த உறுப்பினர் தகுதி

உறுப்பினர் தகுதி ஒட்டுமொத்த கூட்டு பங்களிப்புகளுக்கு கிடையாது. ஒரு திறனாய்வை வெளியீடுவதால் 5 வருட உறுப்பினர் தகுதி அடைகிறோம், கூடவே 2 வருடத்தில் இன்னொரு திறனாய்வை வெளியீடுவதால் மொத்தமாக 10 வருட உறுப்பினர் தகுதிக்கு பதிலாக ஏழு வருட உறுப்பினர் தகுதியே அளிக்கப்படும்.

ஒருவருடைய உறுப்பினர் தகுதி முடிவடைந்தால் மற்றும் அவர் கூடுதலாக காக்ரேனிற்கு எந்த பங்களிப்பும் செய்யாமல் இருந்தால் அவரின் உறுப்பினர் தகுதி கழிக்கப்பட்டு மீண்டும் ஆதரவாளர் நிலைக்கு மாற்றப்படுவார்.

Share/Save