ஆசிரியராகுங்கள்

காக்ரேனின் ஆசிரியாக விருப்பம் கொண்டுள்ளதால் உங்களுக்கு நன்றி. இந்த காக்ரேனின் பணியை செய்ய எங்கள் உறுப்பினர்கள் அதிகமான நேரத்தையும் திறனையும் வழங்குகிறார்கள். இந்த உதவியை செய்ய நீங்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும், காக்ரேன் ஆசிரியரிடமிருந்து எதிர்ப்பார்க்கப்படும் சில பொதுவான தகவல்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. தயவுக்கூர்ந்து இதை படித்த பின்பு நீங்கள் எப்படி உதவ போகிறீர்கள் என்ற முடிவை எடுக்கலாம்.

காக்ரேன் திறனாய்வுகள் குறைந்து இரண்டு நபர்களால் உருவாக்கப்பட வேண்டும், மற்றும் பெரும்பாலான நேரங்களில் இரண்டிற்கு மேற்பட்டவர்கள் தேவைப்படலாம். காக்ரேன் திறனாய்வுகளின் ஆசிரியர் குழு உறுப்பினர்கள் அனைவரும் திறன்கள் வரம்பிலும் மற்றும் அனுபவம் கொண்டு காக்ரேனின் திறனாய்வுகள் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இந்த திறன்கள் மற்றும் அனுபவமும் இவைகளை கொண்டது:

  • தலைப்பு சார்ந்த தகவல் அறிவு
  • முறையான திறனாய்வு திட்டமிடுதல் குறித்த அடிப்படை அறிவு (ஆராய்ச்சி கேள்வியை உண்டாக்குவது, தேடுவது மற்றும் தொடர்பு கொண்ட ஆராய்ச்சிகளின் உண்மை தன்மைகளை ஆராய்வது)
  • அடிப்படை புள்ளியல் அறிவினால் சரியான தகவலை எடுப்பது, எங்கு மெட்டா-பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று ஆராய்வது மற்றும் முடிவுகளை விவரித்து வெளிப்படுத்துவது;
  • அறிவியல் அறிக்கையை வெளியிடும் தன்மையோடு ஆங்கிலத்தில் எழுதக்கூடிய திறன்
  • குழுவிற்குள் திட்ட மேலாண்மை மற்றும் தலைமைத்துவம் திறன் (வழக்கமாக பரிந்துரைக்கப்பட்ட தொடர்பு ஆசிரியர்)

கூடுதலாக காக்ரேன் திறனாய்வின் ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக:

  • அறிவியல் ரீதியாக திறனாய்வுகளை அணுக வேண்டும், முடிந்தவரை குறிக்கோளுடன் இருக்க வேண்டும், மற்றும் கருத்து மோதல்களை தவிர்க்க வேண்டும்;
  • ஆக விரிவாகவும், முறையாகவும் மற்றும் நெறிமுறைகளை எல்லா திறனாய்வுகளிலும் பின்பற்றுவதுடன்; மற்றும்
  • காக்ரேனின் சிகிச்சைக்கான முறையான திறனாய்வுகளின் கைப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனை மற்றும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், CRG கொடுக்கும் குறிப்பான கட்டளைகளையும் அல்லது விருப்பங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காக்ரேன் நேரடி பயிற்சி முகாம்களையும் மற்றும் இணையதள கல்வி மூலமாக முறையான திறனாய்வு நெறிமுறைகளையும் மற்றும் தொடர்புள்ள தலைப்புகளுக்காக பயிற்சி வழங்குகிறது. இந்த பயிற்சி உங்களுக்கு உதவியாக அமையலாம், ஏன்னென்றால் எந்தவிதமான முக்கிய பயிற்சிகளை முடித்தாலும் காக்ரேன் திறனாய்வுகளை நிறைவு செய்ய போதுமான அறிவையும் அனுபவத்தையும் பெற இயலாது.

காக்ரேன் திறனாய்வை முடிக்க பங்குபெறுகின்ற ஆசிரியர்கள் ஆய்வின் துவக்கத்திலிருந்து வெளியிடும் நாட்கள் மத்தியில் கூடுதலான அர்ப்பணிப்பை நேரத்திலும் மற்றும் நிபுணத்துவத்திலும் கொடுக்க நேரிடும். ஆசிரியர் குழு தங்கள் மட்டுப்பாடுகளை அறிந்திருக்க வேண்டும், CRG தலையங்க குழுவிலிருந்து மற்றும் திறனாய்வாளர்கள் மூலமாக வரும் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு பதில் அளிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும், திறனாய்வை முடிக்க விருப்பமும் ஆக்கமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும் மற்றும் அதை மேம்படுத்தவும் வேண்டும்

ஆசிரியர்களுக்கு உதவ, தலைப்பு அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்த நேரத்திலிருந்து காக்ரேன் திறனாய்வை செய்ய படிப்படியான அணுகு முறையை கொண்டு காக்ரேன் பலவிதமான பயிற்சிகளை உருவாக்கியுள்ளது (உதாரணமாக இணைய கல்வி, பயிற்சி முகாம்) இதனால் காக்ரேன் ஆசிரியர்களுக்கு தேவையான முழு ஆதாரங்களையும் அல்லது திறந்த நிலையான ஆதரவை அளிக்கிறது என்று பொருள் படாது, ஆசிரியர்கள் இன்றும் முறையான திறனாய்வு நெறிமுறைகளை முற்றிலும் அறிந்து அதை செய்முறைப்படுத்தி திறனாய்வை முடிக்க ஆற்றலைப்பெற்றிருக்க வேண்டும்.

ஆதரவும் ஊக்கமும் கொடுத்தாலும் கூட ஒரு சில நேரங்களில் திறனாய்வு குழுக்கள் திறனாய்வை முடிப்பதில் போராடுகிறார்கள் அல்லது இவர்கள் மேலோட்டமான கருத்துகளை மட்டும் வழங்குவதால் CRG தலையங்க குழுவின் ஈடுப்பாட்டால் அதிகமான குறிப்புகளை வழங்கி ஏற்றுக்கொள்ளக்கூடிய தரநிலைகளை அடைய நேரிடும். இந்த சூழ்நிலைகளில், CRG குழு ஆசிரியர்களிடமிருந்து திறனாய்வை திரும்ப பெற்றுக்கொள்ள கூடும், திறனாய்வின் தரம் மற்றும் திறனாய்வு குழு ஆய்வை முடிக்காத இந்த காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்படலாம்.

ஆசிரியர் குழு கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்பு என்னவென்றால் திறனாய்வின் ஆரம்பத்திலிருந்து (தலைப்பு பதிவு, நெறிமுறை நிலை அல்லது திறனாய்வு நிலை) தலையங்கம் நிலைக்கு முன்பாக தீர்க்க முடியாத தரம் குறித்த காரணங்களால் திறனாய்வு நீக்கப்படலாம்.

உங்களுக்கு நேரம் மற்றும் திறன்களை அளிக்கக்கூடிய அர்ப்பணிப்பு இருக்குமானால் இங்கு அழுத்துங்கள் “ஆசிரியராகுங்கள்” நீங்கள் காக்ரேன் கணக்குப் பக்கத்திற்கு எடுத்து செல்லபடுவீர்கள் அங்கு ஒரு காக்ரேன் கணக்கை உருவாக்க நேரிடும். உங்களுக்கு ஏற்கனவே காக்ரேன் கணக்கு இருக்கும் பட்சத்தில் நீங்கள் இங்கு உள் நுழையலாம்.

விமர்சகராக தற்போது உங்களால் அர்ப்பணிக்க இயலவில்லை என்றால் தயவுக்கூர்ந்து மற்ற வழிகளிலே காக்ரேனுக்கு பங்களிக்க கருத்தில் கொள்ளுங்கள்.

ஆசிரியராகுங்கள்