பெரியவர்களின் புற்றுநோய் தொடர்பான வலி மேலாண்மைக்குக் கார்டிகோஸ்டெராய்டுகள்

பின்னணி: பின்னணி: புற்றுநோயுடன் தொடர்புடைய, மிகவும் அச்சத்தை விளைவிக்கும் அறிகுறிகளில் ஒன்று வலி. ஒபிஆய்ட்ஸ், வலிசிகிச்சைக்கு முக்கியமானதாக இருக்கிறது, அதே நேரத்தில் வழக்கமான வலி நிவாரணிகளுடன் சேர்த்து கார்டிகோஸ்டீராய்டுகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வு பெரியவர்களின் புற்றுநோய் தொடர்பான வலி சிகிச்சைக்கு கார்டிகோஸ்டீராய்டு எவ்வளவு திறனானதாக இருக்கிறது என்றும், இந்த சிகிச்சை நோயாளிகளால் எவ்வளவு தாக்குப்பிடிக்க முடியும் என்றும் தீர்மானிக்க 29 செப்டம்பர் 2014 வரை உள்ள மருத்துவ சோதனை சான்றுகளை மதிப்பீடு செய்கிறது.

ஆய்வு பண்புகள்: நாங்கள் 1926 பங்கேற்பாளர்களை கொண்ட, 15 பொருத்தமான ஆய்வுகளை அடையாளம் கண்டோம். ஆராய்ச்சிகளின் அளவு 20 முதல் 59 எண்ணிக்கையைக் கொண்டிருந்தது, மற்றும் சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகளின் கால அளவு ஏழு நாட்கள் முதல் 42 வாரங்கள் வரையானவை. பெரும்பாலான ஆய்வுகள் வழக்கமான சிகிச்சைக்கு கார்டிகோஸ்டீராய்டுகளை ,குறிப்பாக டெக்ஸாமீதாசோனை ஒப்பிட்டன.

முக்கிய முடிவுகள் மற்றும் சான்றுகளின் தரம்: மொத்தத்தில், தற்போதுள்ள சான்றுகள் ஒரு சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகளைக் கொண்டிருக்கும் ஆய்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன என்று நாங்கள் கண்டறிந்தோம். கிடைத்த ஆதாரங்கள் மூலம் பின்வரும் முடிவுகளைப் பெறலாம்: 1) புற்று நோயாளிகள் வலி கட்டுபாட்டுக்கு கார்டிகோஸ்டீராய்டுகளின் செயல்திறன் பற்றிய சான்றுகள் பலவீனமாக உள்ளன (வலி நிவாரணம் விளைவுபயனுக்கு ஆதாரங்கள் தரம்குறைந்ததாக இருந்தது); 2) குறிப்பிடத்தக்க அளவு வலி நிவாரணம் சில ஆய்வுகளில் குறிபிடப்பட்டுள்ளது என்றாலும் அவை குறுகிய காலம் மட்டுமே நீடித்தன; இந்த விழைவு குறுகிய காலம் மட்டுமே வாழப்போகும் நோயாளிகளுக்கு முக்கியமானதாக இருக்கலாம்; 3) மொத்தத்தில் கார்டிகோஸ்டீராய்ட் பயனற்றவை என்று பல ஆய்வுகள் கண்டன; 4) குறிப்பிட்ட புற்று நோய் வலி நிவாரணத்திற்கு ஸ்டீராய்ட் பயனுள்ளதாக இருக்கும் என்பதை தீர்மானிக்க சாத்தியம் இல்லாததாக இருந்தது; மற்றும் 5) ஸ்டீராய்டுகளின் பக்க விளைவுகள் (குறிப்பாக நீண்ட காலத்திற்கு) பற்றி நன்கு விவரிக்கபட்வில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: இ. நவீன் குமார் மற்றும் சி.இ.ப.ஏன்.அர். குழு

Tools
Information