பெரிய காயத்தைக் கொண்ட வயது வந்தவர்களுக்கான ஹெலிகாப்டர் அவசர நிலை மருத்துவ சேவைகள்

பின்புலம்

உலகளவில், இறப்பிற்கும் மற்றும் இயலாமைக்கும் காயம் ஒரு முதன்மை காரணமாக உள்ளது, மற்றும் 1970-களிலிருந்து, காயப் பராமரிப்பில் சிறப்பு செயலாண்மை கொண்ட மருத்துவமனைகளுக்கு காயம் கொண்ட மக்களை போக்குவரத்து செய்ய ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஹெலிகாப்டர்கள், துரிதமான போக்குவரத்து மற்றும் பெரிய காயத்தின் மேலாண்மையில் குறிப்பாக பயிற்றுவிக்கப்பட்ட ஆரோக்கிய ஊழியர்களிடமிருந்து பராமரிப்பு பெறுவது போன்றவற்றை உள்ளடக்கிய அநேக சாத்தியமான நன்மைகளை அளிக்கும்.

ஆய்வு பண்புகள்

பெரிய காயத்தைக் கொண்ட வயது வந்தவர்களை போக்குவரத்து செய்ய ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் (ஹெஎம்ஸ்) அல்லது தரைவழி ஆம்புலன்ஸ் (ஜெஎம்ஸ்) இரண்டையும் ஒப்பிட்ட மருத்துவ ஆய்வுகளுக்கு நாங்கள் மருத்துவ இலக்கியத்தை தேடினோம். ஆதாரம் ஏப்ரல் 2015 வரைக்கும் தற்போதையது.

முக்கிய முடிவுகள்

உலகம் முழுவதிலும் 12 நாடுகளிலிருந்து மக்களை உள்ளடக்கிய 38 ஆய்வுகளை நாங்கள் கண்டோம். ஒரு காயம் பட்ட நபருடைய பிழைப்பதற்கான வாய்ப்பை மேம்படுத்துவதற்கு அல்லது நீண்ட-கால இயலாமையின் தீவிரத்தை குறைப்பதற்கு, தரை வழி ஆம்புலன்சை விட ஹெலிகாப்டர் ஆம்புலன்சை பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்குமா என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் விரும்பினர். இந்த ஆய்வுகளில் சிலவை, ஒரு பெரிய காயத்திற்கு பின்னான பிழைப்பிற்கு ஹெஎம்சின் சில நன்மையை சுட்டிக்காட்டின, ஆனால் பிற ஆய்வுகள் அவ்வாறு காட்டவில்லை. ஆய்வுகள் வேறுப்பாடான அளவுகளை கொண்டிருந்தன மற்றும் ஹெஎம்ஸ்க்கு எதிராக ஜெம்ஸ் மூலம் போக்குவரத்து செய்யப்படும் போது, அதிக மக்கள் பிழைத்தனரா என்பதை தீர்மானிக்க விதவிதமான வழிமுறைகளை பயன்படுத்தின. சில ஆய்வுகள், தளத்தில் சிறப்பு மருத்துவர்களை கொண்ட ஹெலிகாப்டர் குழுக்களை உள்ளடக்கிய போது பிற ஹெலிகாப்டர் பணியாளர் குழுக்கள், மருத்துவ உதவியாளர்களையும் மற்றும் செவிலியர்களையும் கொண்டிருந்தன. இதற்கு மேலும், ஹெஎம்ஸ் அல்லது ஜெம்ஸ் மூலம் போக்குவரத்து செய்யப்பட மக்கள், காயப் பிரிவிற்கு பயணப்படும் போது மாறுப்பட்ட எண்ணிக்கையிலான மற்றும் வகைகளான வழிமுறைகளை கொண்டிருந்தனர். சுவாச குழாய் பொருத்துதல் போன்ற இத்தகைய வழிமுறைகளின் சிலவற்றின் பயன்பாடு, சில ஆய்வுகளில் பிழைப்பதை மேம்படுத்துவதற்கு உதவியிருக்க கூடும். எனினும், இந்த மருத்துவ வழிமுறைகள் தரை வழி ஆம்புலன்ஸ் போக்குவரத்தின் போதும் வழங்கப்படலாம். உள்ளடக்கப்பட்ட எந்த ஆய்வுகளிலும் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட தரவு கிடைக்கப் பெறவில்லை. இரண்டு வகையான போக்குவரத்து ஒவ்வொன்றிலும், சாலை போக்குவரத்து நெரிசல் மற்றும் ஹெலிகாப்டர் மோதல்கள் பாதகமான விளைவுகளாக ஏற்படக் கூடும்.

சான்றின் தரம்

ஒட்டுமொத்தமாக, உள்ளடக்கப்பட்ட ஆய்வுகளின் தரம் குறைவாக இருந்தது. குறிப்பிட்ட சிறப்பியல்புகளைக் கொண்ட மக்களுக்கு ஜெம்சை விட ஹெஎம்ஸ் சிறப்பானதாக இருக்க சாத்தியமுள்ளது. பெரும் காயங்களை மேலாண்மை செய்வதில் அதிகமான சிறப்பு பயிற்சி பெற்றிருக்கும் ஊழியர்கள் போன்ற பல்வேறு காரணங்களினால் ஹெஎம்ஸ் சிறப்பானதாக இருக்கக் கூடும். ஆனால், ஹெலிகாப்டர் போக்குவரத்தின் எந்த ஆக்கக் கூறுகள் பிழைப்பதை மேம்படுத்தக் கூடும் என்பதை தீர்மானிக்க அதிக ஆராய்ச்சி தேவைப்படுகிறது. ஜெம்ஸ் குழுவிலுள்ள மக்களுக்கு கிடைக்கப்பெற்ற பராமரிப்பை சில ஆய்வுகள் விவரிக்கவில்லை. இந்த குறைவான அறிக்கையிடல் காரணமாக, மக்கள் பெற்ற சிகிச்சைகளை ஒப்பிட இயலாமல் உள்ளது.

முடிவுரைகள்

தற்போதைய ஆதாரத்தின் படி, ஜெம்சை ஒப்பிடுகையில் ஹெஎம்சின் கூடுதலான நன்மைகள் தெளிவற்றதாக உள்ளன. மேற்படியான ஆராய்ச்சியின் முடிவுகள், அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் குறைக்கப்பட்ட செலவுகளோடு ஆரோக்கிய பராமரிப்பு அமைப்பினுள்ளே ஹெஎம்சின் சிறப்பான நிலைபாட்டிற்கு உதவக் கூடும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information