கரோனரி ஆர்டரி டிசிஸ் (இதயத் தமனி நோய்) கொண்ட நோயாளிகளில் மனச்சோர்விற்கான சிகிச்சைகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

மனச்சோர்வுற்ற இதயத் தமனி நோயாளிகளில், உளவியல் ரீதியான சிகிச்சைகள், மற்றும் எதிர் மனச்சோர்வு மருந்துகள் மீது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்த திறனாய்வு ஆய்வு செய்தது. மனச்சோர்வு, இறப்பு விகிதங்கள், மற்றொரு மாரடைப்பு அல்லது அறுவை சிகிச்சைகள் போன்ற இதய நிகழ்வுகள் , ஆரோக்கிய பராமரிப்புச் செலவுகள் மற்றும் வாழ்க்கைத் தரம் போன்றவற்றின் மீது இந்த சிகிச்சைகளின் விளைவுகளை தீர்மானிக்க வேண்டுவதே இதன் நோக்கமாகும். இந்த திறனாய்விற்கு தொடர்புடைய பதினாறு சோதனைகள் அடையாளம் காணப்பட்டது. ஏழு சோதனைகள் உளவியல் சிகிச்சைகளை ஆராய்ந்தன, எட்டு சோதனைகள் எதிர் மனச்சோர்வு மருந்துகளையும், ஒரு சோதனை உளவியல் மற்றும் மருந்து சிகிச்சைகள் இரண்டையும் ஆராய்ந்தன. மனச்சோர்வு அறிகுறிகளை பொறுத்தவரை, உளவியல் சிகிச்சைகள் மற்றும் எதிர் மனச்சோர்வு மருந்துகள் வழக்கமான பராமரிப்பு அல்லது போலி மருந்தை (செயல்படா மருந்து) விட சற்றே உயர்ந்ததாக இருந்தது. மேலும், பின் தொடரும் மருத்துவமனை அனுமதி விகிதங்கள் மற்றும் அவசரக் கால மருத்துவமனை சந்திப்புகளை குறைப்பதில் போலி மருந்தை விட எதிர் மனச்சோர்வு மருந்துகள் உயர்ந்ததாக இருக்கக் கூடும். மாறாக, இறப்பு விகிதங்கள் மற்றும் இதய நிகழ்வுகள் மீது எந்த நேர்மறையான பலனும் இல்லை என்று தெரிகிறது. வாழ்க்கைத் தரத்தை பொறுத்தவரையிலான முடிவுகள், முடிவற்றதாய் உள்ளன. சுருக்கமாக, உளவியல் ரீதியான சிகிச்சைகளும், எதிர் மனச்சோர்வு மருந்துகளும், இதயத் தமனி நோய் கொண்ட மக்களில் மனச்சோர்வு விளைவுகள் மீது சிறிதளவு, ஆனால் நேர்மறையான பலனைக் கொண்டிருக்கக் கூடும். எனினும், குறைந்த எண்ணிகை கொண்ட சோதனைகளால், ஆதாரங்கள் சிதறியுள்ளன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.