பெல்லஸ் பல்சிக்காக (நோய் மூலம் அறியா முகாவாதம்) அறுவை சிகிச்சை

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பெல்ஸ் பால்சி என்பது முகத்தசைகளை, வழக்கமாக ஒரு பக்கத்தை மட்டும், செயலிழக்கச் செய்யும் நோயாகும். இது ஒரு மூலக் காரணம் அறியப்படாத நோயாகும். முகத்தில் உள்ள ஒரு நரம்பு இடுக்கத்தில் சிக்கிக் கொள்வது அல்லது வீக்கமடைவது போன்ற காரணங்களினால் ஏற்படலாம். பொதுவாக பெல்ஸ் பால்சியால் பாதித்த பெரும்பான்மையானவர்கள் குணமடைந்துவிடுவார்கள், இருப்பினும் சிலர் குணமடைவதில்லை. சில அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நரம்பை அறுவை சிகிச்சை மூலமாக இடுக்கத்திலிருந்து விடுவிப்பதன் மூலம் நோயை குணமடையச் செய்யலாம் என்று கருதினார்கள். எங்களுடைய இந்த பகுப்பாய்வு, பெல்ஸ் பால்சிக்கான அறுவை சிகிச்சையின் பயன்களை, சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, வேறு வகையான அறுவை சிகிச்சை முறை, போலி சிகிச்சை அல்லது பிற மருந்துகளை கொண்டு சிகிச்சை,ஆகியவற்றுடன் ஒப்பிட்டு மதிப்பிடுவதற்காக இந்த பகுப்பாய்வை மேற்கொண்டோம்.

இந்த பகுப்பாய்வுக்காக மேற்கொண்ட பரந்த தேடுதலின் விளைவாக இரண்டு பெல்ஸ் பால்சி உடையவர்களை சோதிக்கும் சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை (RCT) கண்டறிந்தோம். இந்த இரண்டு சோதனைகளும் சேர்ந்து மொத்தம் 69 பெல்ஸ் பால்சி உடையவர்களை சோதனைக்கு உட்படுத்திருந்தது. 12 மாதத்தில் அறுவைசிகிச்சையின் விளைவாக எவ்வளவு குணமடைந்துள்ளனர் என்பதை முக்கிய அளவீடாக கருதி இந்த பகுப்பாய்வை மேற்கொண்டோம் முதலாவது ஆய்வு அறுவைசிகிச்சையை ஸ்டீராய்டு மருந்துடனும், மற்றும் இரண்டாவது சோதனை அறுவைசிகிச்சையை சிகிச்சையை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதுடன் ஒப்பீடு செய்திருந்தது. முதல் ஆய்வில், அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை இல்லாத இரண்டு குழுக்களில், 9 மாதத்தில் நோய்குணமடைதல் ஒரேமாதிரியாகவே இருந்தது. இரண்டாவது ஆய்வில், அறுவைசிகிச்சை செய்துகொண்ட மற்றும் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளதவர்களுக்கும் இடையில், ஒரு வருடத்திற்குப் பின் நோய்குணமடைதலில் எந்தவிதவித்தியாசமும் கண்டறியப்படவில்லை. முதல் ஆய்வில் அறுவைசிகிச்சை செய்து கொண்ட ஒரு பங்கேற்பாளர்க்கு, சிகிச்சைக்குப் பிறகு மிதமான கேள்திறன் இழப்பு மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டது. இரண்டு ஆராய்ச்சிகளும், அதன் சோதனைமுடிவுகளை பாதித்திருக்ககூடிய குறைகளைக் கொண்டிருந்தன.

இந்த ஆய்வு முதலில் 2011 இல் வெளியிடப்பட்டது. நாங்கள் 2012 ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேடல்களை புதுப்பித்தோம், ஆனால் பொருத்தமான புதிய ஆராய்ச்சிகள் ஏதும் கிட்டவில்லை.

இந்த பகுப்பாய்வு மிகவும் தரம் குறைந்த ஆய்வுகளே உள்ளதாக கண்டறிந்துள்ளது மேலும் இந்தசான்றுகள், பெல்ஸ் பால்சி உடையவர்களுக்கு அறுவை சிகிச்சை பயனுள்ளதாக இருக்குமா அல்லது தீங்கானதாக இருக்குமா என்று முடிவெடுக்க போதுமானதாக இல்லை. பெல்ஸ் பால்சி பொதுவாக சிகிச்சை இல்லாமலேயே குணமடையக்கூடிய தன்மை கொண்டதால், இதில் அறுவை சிகிச்சையின் பங்களிப்புகுறித்து மேல் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் குறைவு.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பு: இர.செந்தில் குமார், வை. பிரகாஷ் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு