மக்கள் புகைப்பிடிப்பதை விடுவதற்கு மொபைல் போன்கள் வழியாக வழங்கப்படும் திட்டங்கள் உதவக் கூடுமா?

பின்புலம்

ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளுக்கு ஆதரவளிப்பதற்கு மொபைல் போன்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை, மக்கள் புகைப்பிடிப்பதை விடுவதற்கு ஆதரவளிக்க பயன்படுத்தப்பட முடியுமா என்பதை நாங்கள் அறிய விரும்பினோம். புகைப்பிடிப்பதை விடுவதற்கு விரும்பும் மக்களுக்கு மொபைல் போன் மூலம் வழங்கப்படும் புகைப்பிடிப்பதை விடுதல் திட்டங்களின் விளைவின் மீதான ஆதாரத்தை நாங்கள் திறனாய்வு செய்தோம்.

ஆய்வு பண்புகள்

ஏப்ரல் 2015 வரைக்குமான, சேர்த்துக் கொள்ளத்தக்க 12 ஆய்வுகளை நாங்கள் கண்டோம். இந்த ஆய்வுகள் 11,885 மக்களை உள்ளடக்கின, அவர்கள் புகைப்பிடிப்பதை கைவிட சமாளித்தார்களா மற்றும் ஆறு மாதங்கள் கழிந்தும் கைவிட்டிருந்தார்களா என்று கண்காணிக்கப்பட்டனர்.

முக்கிய முடிவுகள்

அனைத்து ஆய்வுகளிலிருந்து தகவல் இணைக்கப்பட்ட போது, ஆதரவு திட்டங்களை பெற்ற புகை பிடிப்பவர்கள், திட்டங்களை பெறாத புகைபிடிப்பவர்களை விட 1.7 தடவைகள் புகைப்பிடிப்பதை விடுவதில் நிலைத்திருக்க அதிக சாத்தியம் கொண்டவர்களாய் இருந்தனர். (திட்டங்கள் இல்லாமல் 5.6% விட்டதை ஒப்பிடும் போது திட்டங்களோடு, 9.3% விட்டனர்). பெரும்பாலான ஆய்வுகள், குறுந்தகவல்களை முதன்மையாக சார்ந்திருக்கும் திட்டங்களை கொண்டிருந்தன.

சான்றின் தரம் மற்றும் முழுமை

இந்த திறனாய்வின் கண்டுப்பிடிப்புகளில் நாங்கள் மிதமான நம்பிக்கையை கொண்டுள்ளோம். எனினும், அனைத்து ஆய்வுகளும் உயர்-வருமான நாடுகளில் நடத்தப்பட்டன, மற்றும் பெரும்பாலும் குறுந்தகவல்களை பயன்படுத்தின, ஆதலால், ஏழ்மை நாடுகளிலிருந்து உள்ள மக்களுக்கு அல்லது பிற வகையான மொபைல் போன் திட்டங்களுக்கு இந்த முடிவுகள் உண்மையாக இருக்க முடியாது. சேர்க்கை அளவையை சந்தித்த, மக்கள் புகைப்பிடிப்பதை விடுவதற்கு உதவும் ஸ்மார்ட் போன் 'ஆப்ஸ்' மீது வெளியிடப்பட்ட சோதனைகள் எதுவும் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information
Share/Save