பக்கவாத்தினால் கை செயலிழப்பிற்கு கைகளை கொண்டு செய்யும் (hands on) சிகிச்சை முறைகள்

சிகிச்சையாளர்கள் பக்கவாத தாக்கத்திற்குப் பின் கையினை உபயோகிக் பல்வேறு நுட்பங்களை பயன்படுத்துகிரார்கள். எனினும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது போன்ற விவரங்கள் தெளிவாக ஆய்வுகள் விவரிக்கபடவில்லை மேலும் அவை பல்வேறுவிதமாக சேர்த்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்திகளின் எந்த கூறுகள் திறன்வாய்ந்தது என்று தெரியவில்லை. எனவே நாம், பயன்படுத்தப்படும் உத்திகளில் எது நன்மை பயக்கும் என்பதை கண்டறியும் முயற்சியே இந்த ஆய்வின் நோக்கம். எனினும், நாம் பயன்படுத்தப்படும் நுட்பங்களூடைய தெளிவான விளக்கங்கள் மூன்று ஆய்வுகளில் மட்டுமே தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது மேலும், ஓவ்வறு ஆராய்ச்சியிலும், வெவ்வேறு உத்திகள், வேறுபட்ட சூழ்நிலை உள்ள வெவ்வேறு நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டது மற்றும் சிகிச்சையின் திறனையும் வெவ்வேறு விதமாக அளவிடப்பட்டிருந்தது. ஆகையால் தெளிவான முடிவு எடுக்க கடினமாக இருந்தது. இந்த பின்னணியில், இந்த திறனாய்வு இளக்க சிகிச்சை,புறவிசையியக்க பயிற்சிகள் மற்றும் புறவிசையியக்க மூட்டசைவு ஆகிய சிகிச்சைகள் பக்கவாத்தினால் பாதிக்கப்பட்ட கையின் பயன்பாட்டிற்க்கு குறைவான ஆதாரங்களே உள்ளன என கண்டறிந்தது, ஆகையால் மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: க. ஹரிஓம், வை. பிரகாஷ், ஜெ.சரவண்குமார் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information