மல்டிபிள் ஸ்கலரோசிஸ்-சிற்கு சிகிச்சை அளிப்பதற்காக கார்டிக்கோ-ஸ்டீராய்டுகளின் நீண்ட-கால பயன்பாடு 

மல்டிபிள் ஸ்கலரோசிஸ் என்பது மூளை மற்றும் தண்டுவடத்தை பாதிக்கும் ஒரு அழற்சி நோயாகும். இது, மீளப் பெறுகின்ற நரம்பியல் திறன் பற்றாக்குறைகளின் தொடர்கள் (மறு வீழ்வுகள்) மற்றும் அதே போல், காலப்போக்கில், பேணப்பட்ட இயலாமை தேக்கத்தை விளைவிக்கும். கார்டிக்கோ-ஸ்டீராய்டுகள் ஆற்றல் மிக்க அழற்சி -நீக்கி மருந்துகள் ஆகும். கார்டிக்கோ-ஸ்டீராய்டுகளின் நீண்ட-கால பயன்பாடு, இயலாமை தேக்கத்தை குறைக்கும் என்று அடிக்கோள் காட்டப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை முன்னிலைப்படுத்திய மூன்று ஆய்வுகளை திறனாய்வாளர்கள் கண்டனர். நீண்ட-கால கார்டிக்கோ-ஸ்டீராய்டுகள், இயலாமை தேக்கத்திற்கு ஒரு பயனுள்ள விளைவை கொண்டிருந்தது என்று ஒரு பகுப்பாய்வு காட்டியது; எனினும், இந்த முடிவிற்கு இரண்டு சிறிய ஆய்வுகளே பங்களித்தன. மறு வீழ்வுகளின் அடுக்கு நிகழ்வுகள் மீதான நீண்ட-கால கார்டிக்கோ-ஸ்டீராய்டுகளின் விளைவை பற்றி நம்பத்தகுந்த கருத்து கூறுவதற்கு இயலவில்லை. பக்க விளைவுகள் மிக மோசமாக பதிவு செய்யப்பட்டிருந்தன. எனவே, இந்த சிகிச்சைக்கு கடுமையான சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் உத்தரவிடப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information