பக்கவாதத்திற்குப் பின் வரும் ஒருபக்க தசைத்தளர்ச்சி உள்ளவர்களின் மேல்கை குறைபாட்டு சிகிச்சைக்கு மனப் பயிற்சி.

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

மனப் பயிற்சி என்பது ஒருவர் ஒரு, செயல் அல்லது பணியை உள்ளபடியாக உடல்ரீதியாக செய்யாமல் அந்த செயல் அல்லது பணியை திரும்ப திரும்ப மன ஒத்திகை செய்யும் செயற்பாங்கு ஆகும்.மனப் பயிற்சியின் இலக்கு அந்த செயல் அல்லது பணியின் செயல் நிறைவை மேம்படுத்துவது ஆகும்.மனபயிற்சி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு புனர் வாழ்வு சிகிச்சையிலுள்ளவர்கள் பொதுவாக செய்யும் உடல் பயிற்சி நடைமுறைக்குசெயல் திறம் மிக்க ஒரு துணைப் பயிற்சியாக முன் மொழியபட்டுள்ளது. எங்களுடைய நூற்று பத்தொன்பது பங்கேற்பாளர்களை கொண்ட ஆறு ஆராய்ச்சிகளின் மதிப்பாய்வின் மூலம் பாரம்பரிய முறை உடல்சார் புனர் வாழ்வு சிகிச்சை மட்டும் அளிப்பதை விடவும் பாரம்பரிய முறை உடல்சார் புனர் வாழ்வு சிகிச்சையோடு மனப்பயிற்சியையும் சேர்க்கும்போது மேம்பட்ட பலன்கள் ஏற்பட்டமைக்கு குறைவான ஆதாரங்கள் கிடைத்தன.இதுநாள்வரை கிடைக்கப்பெற்ற சான்றுகள் மேற்படிமேம்பாடுகள் மேல் அவையம் (upperlimb) பொருத்தமான நிஜ வாழ்க்கை பணியின் (உதாரணமாக குடிகலத்திலிருந்து குடித்தல், கதவு குமிழ்களை கையாளுதல்) செயல் திறனை அளவிடும் வரையரைக்குள்ளாக மட்டுமே காண்பிக்கின்றன. மன பயிற்சியை உடல் பயிற்சியுடன்சேர்த்து கொடுக்கும்போது மேல் அவையம் (upper limb) இயக்குதசை திறனில் விளைவுகளை (தெரிவு செய்யப்பட மேல் அவைய அசைவுகளை வலிவு,வேகம் மற்றும் ஒருங்கிணைப்புடன் செய்யும் திறன்) ஏற்படுத்துகிறதா என்பதில் தெளிவில்லை.முடிவாக, நேர்மறையான விளைவுகளை பெற தேவையான மன பயிற்சியின் அம்சங்களை ( உதாரணமாக மன பயிற்சி அமர்வுகள் எவ்வளவு காலஅளவு தேவை எத்தனை மன பயிற்சி அமர்வுகள் தேவை?, முதலியன) அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோரின் குணதிசயங்கள் (பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதிலிருந்து எவ்வளவு நாட்கள்கழிந்துள்ளன? எந்த அளவு மீட்சி தேவை?முதலியன) போன்ற விபரங்களை அளிப்பவையான சான்றுகள் ஏதும் இல்லை. இருந்தபோதிலும், நன்னம்பிக்கையுடன் இருப்பதற்கு காரணங்கள் உள்ளன, ஏனென்றால் அதிகமான பெரிய அளவு ஆராய்ச்சிகள் தற்போது நடந்து கொண்டிருப்பதால் சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: கா.அழகு மூர்த்தி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு