தசைப் பிடிப்புகளுக்கு குயினைன்

திறனாய்வு கேள்வி

தசைப் பிடிப்புகள் மீது குயினைனின் விளைவை பற்றிய ஆதாரத்தை நாங்கள் திறனாய்வு செய்தோம்.

பின்புலம்

தசைப் பிடிப்புகள் எங்கு வேண்டுமானாலும் மற்றும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்; எனினும், வயதான மக்களில் குறிப்பாக கால் தசைப் பிடிப்புகள் பொதுவாக உள்ளன. குயினைன் என்பது தசைப் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருந்தாகும். தசைப் பிடிப்புகளை குறைப்பதற்கான அதின் திறன் பற்றி முரண்பாடான ஆதாரம் உள்ளது. மிகை மருந்தளவில், குயினைன் கடுமையான, கூடுமானால் சாவுக்கேதுவான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

ஆய்வு பண்புகள்

1586 பங்கேற்பாளர்களைக் கொண்ட 23 சோதனைகளை இந்த திறனாய்வு உள்ளடக்கியது. செயலற்ற சிகிச்சை (போலி சிகிச்சை) அல்லது பிற செயல்படும் சிகிச்சைகளுக்கு எதிராக குயினைன் அல்லது குயினைன்-சார்ந்த மருந்துகளை சோதனைகள் ஒப்பிட்டன. நாங்கள் மருத்துவ இலக்கியத்தை மீண்டும் தேடிய போது மற்றும் திறனாய்வை 2014-ல் புதுப்பித்த போது, எந்த புதிய ஆய்வுகளையும் நாங்கள் காணவில்லை.

முக்கிய முடிவுகள் மட்டும் சான்றின் தரம்

உள்ளடக்கப்பட்ட சோதனைகளின் ஒரு தலை சார்பு அபாயம் குறிப்பிடத் தகுந்த வகையில் வேறுப்பட்டிருந்தன. அனைத்து 23 சோதனைகளும் சீரற்ற ஒதுக்கீடு செய்ததாக பறைசாற்றின, ஆனால், பங்கேற்பாளர்கள் எவ்வாறு சிகிச்சைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர் என்பதை அநேக ஆய்வுகள் தெளிவாக விவரிக்க தவறி விட்டன. குயினைன் (தினமும்​ 200 மிகிராம் முதல் 500 மிகிராம் வரை) குறிப்பிடத்தக்க வகையில் தசைப் பிடிப்பின் எண்ணிக்கை மற்றும் தசைப் பிடிப்பு நாட்களைக் குறைக்கிறது என்பதற்கு குறைந்த தர ஆதாரமும் மற்றும் குயினைன் தசைப் பிடிப்பின் தீவிரத்தை குறைக்கிறது என்பதற்கு மிதமான தரம் கொண்ட ஆதாரமும் உள்ளது. போலி சிகிச்சையோடு ஒப்பிடுகையில், குயினைனோடு அதிகமான சிறியளவு பாதக நிகழ்வுகள் உள்ளன என்றும் ஆனால், பெரியளவு பாதக நிகழ்வுகளில் அதிகரிப்பு இல்லை என்பதற்கு மிதமான தரம் கொண்ட ஆதாரம் உள்ளது. எனினும், இறப்பு உட்பட கடுமையான தீங்கை குயினைன் மிகை மருந்தளவு ஏற்படுத்தக் கூடும் என்பதற்கு பிற ஆதார மூலங்களிலிருந்து நம்பகமான அறிக்கைகள் உள்ளன .

வைட்டமின் E-யோடு குயினைனை அல்லது ஒரு குயினைன்-வைட்டமின் E கலவையோடு ஒப்பிடும் போது எந்த குறிப்பிடத்தக்க வித்தியாசமும் இல்லை என்பதை குறைந்த அல்லது மிதமான தரம் கொண்ட ஆதாரம் காட்டுகிறது. தனியே வழங்கப்பட்ட குயினைனை விட தியோபயலினோடு சேர்க்கப்பட்ட குயினைன், தசைப் பிடிப்புகளை அதிகமாக மேம்படுத்துகிறது என்பதற்கு ஒரு சோதனையிலிருந்து ஆதாரம் உள்ளது. ஒரு சோதனையில், சைலோகேன் ஊசிகளோடு குயினைனை ஒப்பிட்ட போது எந்த குறிப்பிடத்தக்க வித்தியாசமும் இல்லை.

சிறந்த மருந்தளவு மற்றும் சிகிச்சையின் காலஅளவு, அத்துடன் தசைப் பிடிப்புகளுக்கு குயினைனுக்கு மாற்று மருந்துகள் ஆகியவற்றை தெளிவுப்படுத்துவதற்கு அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

ஆதாரம் அக்டோபர் 2014 வரைக்கும் நிலவரப்படியானது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information